20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி-20 உச்சி மாநாடு ஜூலை 7 மற்றும் 8 தேதி ஜெர்மனி ஹேம்பர்க் நகரில் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மாநாட்டில் பங்கேற்ற ரஷிய அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் முதல் முறையாக சந்தித்துக் கொண்டனர். 


இவர்கள் இருவரும் ஒருமுறை சந்தித்ததாக அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், விளாடிமிர் புடினும் மற்றும் டொனால்ட் டிரம்பும் 2வது முறையாக சந்தித்ததாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. 


அமெரிக்க வெள்ளை மாளிகை இந்த செய்தியை உறுதி செய்துள்ளது. இரு நாட்டு தலைவர்களுடம் ஜி-20 மாநாட்டின் விருந்து நிகழ்ச்சியின் இறுதியில் சந்தித்து பேசிக் கொண்டதாக என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.