டிரம்ப் மருமகனை விசாரிக்க எப்.பி.ஐ., முடிவு
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக புகார் தொடர்பாக, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மருமகனிடம் விசாரணை நடத்த எப்.பி.ஐ., முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவாக ரஷ்யா தலையீடு இருந்ததாக புகார் கூறப்பட்டது. இதனை டிரம்ப் தரப்பு மறுத்து இருந்தது.
இந்நிலையில் தற்போது வெள்ளை மாளிகை ஆலோசகராக இருக்கும் டிரம்ப்பின் மருமகன் குஷ்னர் ரஷ்ய தூதர் செர்ஜே கிஸ்லயக் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த வங்கி உயரதிகாரி செர்ஜே கோர்கோவை சந்தித்து பேசியுள்ளது தொடர்பாக செய்தி வெளியானது.
இதனால் அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு தொடர்பாக குஷ்னரிடமும் எப்.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.