லண்டன்: யூனிலீவர்-க்கு சொந்தமான ’டவ்’ தனது பேஸ்புக் பக்கத்திலுருந்து ஒரு "மூன்று நிமிட விளம்பர வீடியோ கிளிப்" ஒன்றை நீக்கியுள்ளது. அதுமட்டும் அல்லாமல் அந்த வீடியோவினை பதிவிட்டதற்காக அந்நிறுவனம் மக்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏன்?... அப்படி என்ன இருக்கின்றது அந்த விளம்பரத்தில்!


இந்த விளம்பரத்தில் 3 பெண்கள் இடம்பெறுகின்றனர், முதல் பெண் கருமை நிற ஆடையை அணிந்துள்ளார், அவர் தனது ஆடையினை மாற்றுகையில் அவரது ஆடையுடன் சேர்த்து அவரது உடலும் பழுப்பு நிறத்தில் மாறுகின்றது. அவரின் பின்னர் மற்றொரு பெண் தனது ஆடையை மாற்றுகிறார் அவர் மாற்றுகையில் பழுப்பு நிறத்திலிருந்து வென்மை நிறத்திற்கு மாறுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது!


நிறுவனத்தின் பார்வையில் இவ்விளம்பரத்தில் அவர்கள் கூறுவதாவது, தங்களது தாயாரிப்பினை பயன்படுத்துகையில் இந்த நிறம் மாற்றம் நிகழ்வது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. 


ஆனால் சமூக வலைதளத்தில் இவ்விளம்பரத்திற்கு எதிர்பு தெரிவித்து வரும் மக்கள், இவ்விளம்பரம் இன வேறுபாட்டினை குறிப்பதாக கூறி தங்களது எதிர்பினை தெரிவித்து வருகின்றனர். 


இதனால் இந்த விளம்பரத்தினை நீக்கிவிட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளது ‘டவ்’ நிறுவனம்!


உங்கள் பார்வைக்கு அந்த விளம்பரம்!



(Courtesy: @Robin Hill)