ஆப்பிரிக்க தலைவர்களின் போர்நிறுத்த ஒப்பந்தம் எங்களை ஒன்றும் செய்யாது என M23 கிளர்ச்சி இராணுவ குழு கூறுகிறது. கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசின் அரசாங்கத்துடன் நேரடி உரையாடலுக்கு அழைப்பு விடுத்த கிளர்ச்சிக் குழு, "இந்த ஒப்பந்தம் தொடர்பான விஷயத்தை சமூக ஊடகங்களில் பார்த்து தெரிந்துக் கொண்டோம். அந்த கூட்டத்தில் M23 தரப்பில் இருந்து யாரும் இல்லை, அரசாங்கம் உண்மையில் எங்களைப் பற்றி கவலைப்படவில்லை, எனவே அந்த போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக எங்களுக்கு கவலை இல்லை என்று M23 இன் அரசியல் செய்தித் தொடர்பாளர் லாரன்ஸ் கன்யுகா கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம், குறிப்பாக கிளர்ச்சிக் குழுக்களின் தாக்குதல்களை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டது, ஆனால், "அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை" என்று M23 கிளர்ச்சி இராணுவக் குழு அறிவித்துள்ளது, சர்வதேச அளவில் கவலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.


மேலும் படிக்க | பாகிஸ்தானில் இந்து சமூகத்தினரின் நிலை என்ன?


இந்த விவகாரம் தொடர்பாக AFP செய்தி சேனலிடம் பேசிய M23 கிளர்ச்சிக் குழுவின் அரசியல் செய்தித் தொடர்பாளர் லாரன்ஸ் கன்யுகா, "பொதுவாக போர் நிறுத்தம் ஏற்படும் போது, அது போரிடும் இரு தரப்புக்கும் இடையில் இருக்கும்" என்று கூறினார்.


ஏப்ரலில் "ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை" கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டதாகவும், அது இன்னும் நடைமுறையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.


காங்கோ, புருண்டி, ருவாண்டா மற்றும் அங்கோலா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள், கென்யாவின் முன்னாள் அதிபர் உஹுரு கென்யாட்டாவுடன் இணைந்து வெளியிட்ட அறிவிப்பில், M23 போர்நிறுத்தத்திற்கு இணங்க வேண்டும் மற்றும் அதன் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்தும் வெளியேற வேண்டும் என்று கூறினார். குழு இதைச் செய்யத் தவறினால், பிராந்திய சக்திகளின் தலையீட்டை எதிர்கொள்ள நேரிடும் என்று அது எச்சரித்தது.


"M23 கிழக்கு ஆஃப்ரிக்க சமூகத்தை (EAC) திரும்பப் பெறவில்லை என்றால், குழுவை இணங்க நிர்ப்பந்திக்க சக்தியைப் பயன்படுத்துவதை தலைவர்கள் அங்கீகரிக்க வேண்டும்" என்று ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Pakistan Army: பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதி Lt Gen அசிம் முனீர் 


ஆனால், "நாளை மாலை 6:00 மணி (1600 GMT) வரை நேரம் கொடுக்கிறோம், அரசாங்கம் எங்களைத் தாக்குகிறதா இல்லை தொடர்பு கொள்கிறதா என்று பார்க்கிறோம்" என்று கூறிய M23 கிளர்ச்சிக் குழுவின் அரசியல் செய்தித் தொடர்பாளர் லாரன்ஸ் கன்யுகா, "நாங்கள் எங்களை பாதுகாத்துக் கொள்கிறோம்..." என்று மேலும் கூறினார்.


மோதல்களுக்கு வழிவகுக்கும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க காங்கோ அரசாங்கத்துடன் நேரடி உரையாடலுக்கு எப்போதும் M23  தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.


அங்கோலா தலைநகர் லுவாண்டாவில் புதன்கிழமை நடைபெற்ற மினி உச்சி மாநாட்டில் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குக் குடியரசில் வெள்ளிக்கிழமை இரவுக்குள் போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும், "ஆக்கிரமிக்கப்பட்ட மண்டலங்களை" காலி செய்துவிட்டு M23 கிளர்ச்சியாளர்கள் "தங்கள் ஆரம்ப நிலைகளுக்குத் திரும்பச் செல்ல வேண்டும்" என்றும் இந்த ஒப்பந்தம் அழைப்பு விடுக்கிறது.


M23 கிளர்ச்சிக் குழுவுடன் நேரடி பேச்சுவார்த்தைகளை நிராகரித்த காங்கோவின் வெளியுறவு மந்திரி கிறிஸ்டோஃப் லுடுண்டுலா, "நாளை, மாலை 6:00 மணிக்கு, M23 அதன் அனைத்து தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும்" என்று நேற்று (நவம்பர் 24) கின்ஷாசாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  


மேலும் படிக்க: கொடூர கொலையை நினைவுபடுத்திய டெல்லி சம்பவம்! மனைவியை 72 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ