கொடூர கொலையை நினைவுபடுத்திய டெல்லி சம்பவம்! மனைவியை 72 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்

Shraddha Murder Case: 2010 ஆம் ஆண்டு டேராடூனில் நடந்த இதேபோன்ற ஒரு பயங்கரமான சம்பத்தை நினைவுபடுத்தியுள்ளது ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கு.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 15, 2022, 06:18 PM IST
  • ஷ்ரத்தாவை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டிய காதலன்.
  • மனைவியை கொலை செய்து 72 துண்டுகளாக வெட்டிய கணவன்.
  • ராஜேஷ் குலாட்டிக்கு ஆயுள் தண்டனை.
கொடூர கொலையை நினைவுபடுத்திய டெல்லி சம்பவம்! மனைவியை 72 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்

தேசிய தலைநகரம் டெல்லி மெஹ்ரோலியில் நடந்த கொடூரமான "ஷ்ரத்தா கொலை வழக்கு" போன்று 12 ஆண்டுகளுக்கு முன்பு டேராடூனில் நடந்த ஒரு பயங்கரமான கொலையை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். ஷ்ரத்தாவை கொலை செய்த அவரது காதலன் 35 துண்டுகளாக வெட்டி, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வெட்டப்பட்ட உறுப்புகளை புதைத்துள்ளார். இதே போன்ற ஒரு சம்பவம் 2010 ஆம் ஆண்டு டேராடூனில் மென்பொருள் பொறியாளரான ராஜேஷ் குலாட்டி என்ற நபர் தனது மனைவி அனுபமா குலாட்டியைக் கொன்று, அவரது உடலை 72 துண்டுகளாக வெட்டி, உடல் உறுப்புகளை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து, உத்தரகண்ட் தலைநகர் டேராடூன் முழுவதும் பல இடங்களில் துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் உறுப்புகளை புதைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு கொலையாளிகளும் கொடூரமான மனநிலையால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், தற்செயலான தூண்டுதலால் கொலை செய்யவில்லை, வேண்டுமென்றே கொலை செய்துள்ளனர் என்று மருத்துவ நிபுணர்களின் கூற்றாக உள்ளது.

அனுபமா கொலை வழக்கு Vs ஷ்ரத்தா கொலை வழக்கு

2010-ம் ஆண்டு நடந்த அனுபமா கொலை வழக்குக்கும், சமீபத்தில் நடந்த ஷ்ரத்தா கொலை வழக்குக்கும், இறந்தவரின் உடலை துண்டு துண்டு வெட்டியதில் ஒற்றுமை இருப்பது மட்டுமின்றி, இரண்டு சம்பவங்களிலும் கொல்லப்பட்டவர்களின் துர்நாற்றத்தை மறைக்க நார்மல் ஃப்ரிட்ஜ் அல்லது டீப் ஃப்ரீசர்களை கொலையாளிகள் பயன்படுத்தி உள்ளனர்.  ஷ்ரத்தாவின் உடல் துண்டுகளை அப்புறப்படுத்த, கொலையாளி அஃப்தாப் பூனவல்லா 18 நாட்களாக இரவு நேரத்தில் மெஹ்ரோலியில் உள்ள காடுகளுக்குச் சென்று துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் உறுப்புகளை புதைத்துள்ளார். அதேபோல டேராடூனில் ராஜேஷ் குலாட்டியும் அவரது மனைவியை வீட்டில் கொன்றுவிட்டு 72 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்து சடலத்தின் துண்டுகளை ஒவ்வொன்றாக தினமும் கருப்பு பையில் போட்டு கொண்டு ராஜ்பூர் சாலையில் உள்ள வாய்க்காலில் தொடந்து பல நாட்களாக எறிந்துள்ளார். 

இந்த இரண்டு சம்பவங்களிலும், கொலையாளிகள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு உள்ளனர். பல மாதங்கள் உடல் துண்டுகள் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருந்தும், அக்கம் பக்கத்தினர் கூட இந்த சம்பவம் பற்றி தெரியாமல் பார்த்துக்கொண்டனர். 

மேலும் படிக்க: Delhi Murder : பிரிட்ஜில் பழைய காதலி... புது காதலியுடன் வீட்டிற்கு வந்த அப்தாப்... திடுக்கிடும் தகவல்கள்!

இந்த பயங்கரமான கொலை சம்பவம் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது?

இருவரும் கொலை செய்தப் பிறகு, யாருக்கும் சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக, ராஜேஷ் குலாட்டி தனது மனைவி அனுபமாவின் மின்னஞ்சல் மூலம் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு செய்திகளை அனுப்பி வந்துள்ளார். அதே போல அஃப்தாப் பூனாவல்லாவும் பல வாரங்களாக ஷ்ரத்தாவின் சமூக ஊடகங்களில் பயன்படுத்தி வந்துள்ளார். 

17 அக்டோபர் 2010 அன்று அனுபமா படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு பல முயற்சிகள் செய்தும் அவரது சகோதரியைத் தொடர்பு கொள்ள முடியாததால், அவரது சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பிறகு 12 டிசம்பர் 2010 அன்று தான் உண்மை தெரியவந்தது. அதேபோல மெஹ்ரோலி கொலை வழக்கில், ஷ்ரத்தாவின் தொலைபேசி நீண்ட நாட்களாக அணைக்கப்பட்டு இருந்ததாக அவரது தோழி சகோதரரிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு ஷ்ரத்தாவின் தந்தை தனது பெண்ணை காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்தார். டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பயங்கரமான கொலை சம்பவம் வெளிசத்துக்கு வந்தது.

தண்டனை மற்றும் அபராதம்:

இந்த கொலை சம்பத்தில் 2017-ம் ஆண்டு உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் ராஜேஷ் குலாட்டியின் மனைவியைக் கொன்ற வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. குலாட்டிக்கு 15 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது டெல்லியில் நடந்த கொலை குறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 

மேலும் படிக்க: காதலியை கொன்று 35 துண்டுகளாக வெட்டி புதைத்த காதலன்! தில்லியில் நடந்த கொடூரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News