மோடியின் அழைப்பை ஏற்று ட்ரம்ப்-ன் மகள் இந்தியா வருகை!
நவம்பர் மாத இறுதியில் ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ள உலகளாவிய தொழில் முனைவோர் உச்சி மாநாட்டில் (GES) பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவான்கா இந்தியா வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது, உலகத் தொழில் முனைவோர் மன்றத்திற்கு தலைமை வகிக்க, டிரம்ப்பின் மகள் இவான்காவிற்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பினை ஏற்று இவான்கா இந்தியா வருகிறார்.
இவான்கா ஒரு அமெரிக்க தொழிலதிபர், முன்னாள் பேஷன் மாடல் மற்றும் அவரது தந்தையின் உதவியாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.