வாஷிங்டன்: COVID-19 காரணமாக உலகெங்கிலும் உள்ள 15 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள்  தங்கள் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களை இழந்துவிட்டதாக தி லான்செட்டில் (The Lancet)வெளியிடப்பட்ட புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தொற்றுநோயின் முதல் 14 மாதங்களில், தாய் - தந்தை இருவர், அல்லது இருவரில் ஒருவரை இழந்துள்ளனர். மேலும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர், தாத்தா -பாட்டியின் பராமரிப்பில் இருந்த நிலையில், அவர்கள் மரணமடைந்ததால், அனாதைகள் ஆனதாக, இந்த ஆய்வு மதிப்பிடுகிறது.


இந்தியாவில், மார்ச் 2021 (5,091) உடன் ஒப்பிடும்போது ஏப்ரல் 2021 காலகட்டத்தில் புதிதாக அனாதையான (43,139) குழந்தைகளின் எண்ணிக்கையில் 8.5 மடங்கு உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.


பெற்றோர் அல்லது பராமரிப்பாளரை இழந்த குழந்தைகள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வில், இவை  குறுகிய மற்றும் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும். அதாவது நோய், உடல் ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் வன்முறை மற்றும் இளம் பருவ கர்ப்பம் போன்ற ஆபத்துகள் அதிகரிக்கலாம்.



"எங்கள் ஆய்வு முடிவுகள் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகின்றன, மேலும் இப்போதே அவர்களைப் பாதுகாப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும், ஆன திட்டங்கள் வகுக்கப்பட்டு,  அதற்கு முதலீடு செய்ய வேண்டும்," என்று என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் COVID-19 R நடவடிக்கை குழுவில் உள்ள முக்கிய உறுப்பினரான டாக்டர் சூசன் ஹில்லிஸ் கூறினார்.


மார்ச் 2020 முதல் ஏப்ரல் 2021 வரையிலான COVID-19 பாதிப்பு தொடர்பாக 21 நாடுகளின் புள்ளிவிவரங்கள் மற்றும் இறப்பு தரவுகளின் அடிப்படையில், ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.


பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களாக தாத்தா பாட்டியை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிக எண்ணிக்கையிலான நாடுகளில் தென்னாப்பிரிக்கா, பெரு, அமெரிக்கா, இந்தியா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகியவை அடங்கும்.


COVID-19 காரணமாக குழந்தைகளின் பாதுகாவர்கள் இறப்பு விகிதம் அதிகம் கொண்ட நாடுகளில் பெரு, தென்னாப்பிரிக்கா, மெக்ஸிகோ, பிரேசில், கொலம்பியா, ஈரான், அமெரிக்கா, அர்ஜென்டினா மற்றும் ரஷ்யா ஆகியவை அடங்கும்.


Also Read | COVID-19 Update ஜூலை 21: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 1891


கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும், பெண்களை விட ஆண்களில் இறப்புகள் அதிகமமாக உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக நடுத்தர மற்றும் வயதானவர்களில் இறப்பு அதிகம் இருந்தது. மேலும், கொரோனா இழப்பில், தாய்மார்களை இழந்ததை விட தங்கள் தந்தையை  இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகமாக இருந்ததும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 


COVID-19  தொடர்பான திட்டங்களில், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவி செய்யும் வகையில் அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.


Also Read | Monkey B Virus: தொற்று அறிகுறிகள், சிகிச்சை, பிற முக்கிய விபரங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR