வெளிநாட்டவருக்கான மசோதாவிற்கு குவைத் நாடு ஒப்புதல் அளித்துள்ளதால் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் குவைத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மசோதாவின் படி, குவைத்தில் உள்ள இந்தியர்கள் மக்கள் தொகை, குவைத் மக்கள் தொகையில் 15 சதவீதம் என்ற அளவை தாண்டக்கூடாது.  இது தொடர்பான ஒரு விரிவான திட்டத்தை தயாரிக்க, சமபந்தப்பட்ட சட்ட குழுவிற்கு இந்த மசோதா அனுப்பப்பட்டுள்ளது.  


ALSO READ | இந்தியா-பூட்டான் கோலோங்சு நீர் மின் திட்டம் ஒரு அலசல்...


குவைத் நகரம் (Kuwait City): குவைத் நாடாளுமன்றம், வெளிநாட்டினருக்கான ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது, இதன் விளைவாக சுமார் 8 லட்சம் இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம்.


வெளிநாட்டவருக்கான ஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், இது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது என்றும் வளைகுடாவின் உள்ளூர்  ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


இதனால், சுமார் 8,00,000 இந்தியர்கள் குவைத்தை விட்டு வெளியேறக்கூடும் அபாயம் உள்ளது. ஏனெனில் இந்திய சமூகம் குவைத்தில் மிக அதிக அளவில் உள்ளனர். குவைத்தில்  சுமார் 14 லட்டம் இந்தியர்கள் உள்ளனர்.


ALSO READ | Somaliland தைவான் இடையிலான ஒப்பந்தத்தினால் அதிர்ச்சியில் உள்ள சீனா..!!!


 


குவைத்தின் உள்ள 43 லட்சம் மக்கள் மக்கள்தொகையில், வெளிநாட்டவர்கள் 30 லட்சம் பேர் உள்ளனர். COVID-19 தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து, சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் குவைத்தில் உள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என அழைப்பு விடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


குவைத் நாட்டில் 49,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.


கடந்த மாதம், குவைத்தின் பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா, (Sheikh Sabah Al Khalid Al Sabah) நாட்டில் உள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கையை 70 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைக்க  முன்மொழிந்தார் என்று ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.