தலிபான்கள் நடத்தி வரும் தாக்குதல்களால் ஆப்கானிஸ்தான் (Afghanistan) பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் கந்தஹார் விமான நிலையம் மீது அடுத்தடுத்து மூன்று ராக்கெட்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதால், அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செய்தி நிறுவனம் AFP இந்த சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ளது. ஆப்கானிஸ்தான் (Afghanistan) கந்தஹார் விமான நிலையத்தில் மூன்று ராக்கெட்டுகள் வீசப்பட்டன என்றும் அவற்றில் இரண்டு ரன்வேயில் மோதியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர் விமான நிலையத்தின் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.


இதற்கிடையே, காபூலில் உள்ள சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரி ஒருவர் ராக்கெட் தாக்குதலை உறுதி செய்துள்ளார். தலிபான்கள் பல வாரங்களாக கந்தஹாரின் புறநகர்ப் பகுதிகளில் தாக்குதல்களைத் தொடங்கினர், பயங்கரவாதிகள் மாகாண தலைநகரைக் கைப்பற்றும் நிலையில் இருப்பதாக அச்சத்தை ஏற்படுத்தினர்.


ALSO READ | அதிர்ச்சி தகவல்! டேனிஷ் சித்திகி தாக்குதலில் இறக்கவில்லை; ‘படுகொலை’ செய்யப்பட்டார்


சனிக்கிழமை இரவு நடந்த இந்த தாக்குதலில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. தாக்குதலுக்கு பிறகு அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாக்குதலின் பின்னணியில் தலிபான்கள் இருப்பதாக அதாரம் உள்ளதாக கூறப்படுகிறது. 


கந்தஹார் ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரம் மற்றும் இராணுவத்திற்கு முக்கியமானது என்பதால் இங்குள்ள விமான நிலையத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் அனுப்பப்படுகின்றன. அதனால்தான் இந்த விமான நிலையத்தை கைப்பற்றி, ஆப்கானிஸ்தான் இராணுவத்தை பலவீனப்படுத்த தலிபான்கள் இத்தகைய தாக்குதல்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2-3 வாரங்களில் இப்பகுதியில் தலிபான்கள்  நடத்தும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.


ALSO READ | ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வெறியாட்டம்; வீதிகளில் சிதறிக் கிடக்கும் சடலங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR