ஆப்கானிஸ்தானின் (Afghanistan) காந்தஹார் மாகாணத்தின் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் 100 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறை மற்றும் கொலை சம்பவங்களுக்கு ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம், தலிபான்களை குற்றம் சாட்டுகிறது. ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் 90 சதவீதத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக முன்னர் கூறப்பட்டது. கடந்த வாரமும் தலிபான்கள் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தை தாக்கினர்.
ஆப்கானிஸ்தான் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த 100 உடல்கள் இன்னும் பூமியில் கிடக்கின்றன என கூறப்படுகிறது. தலிபான்கள் பொதுமக்களின் வீடுகளை சூறையாடி, அங்கே தங்கள் கொடிகளை நாட்டி, அப்பாவி மக்களைக் கொன்றனர். இருப்பினும், இந்த மரணங்களுக்கு தலிபான்கள் பொறுப்பேற்கவில்லை. பொதுமக்கள் கொல்லப்படுவதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தாலிபான்கள் மறுத்துள்ளனர்.
ஆப்கான் (Afghanistan) உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மிர்வாஸ் ஸ்டானாக்ஸாய், "தங்கள் பஞ்சாபி (பாகிஸ்தான்) எஜமானர்களின் உத்தரவின் பேரில் தாலிபான் பயங்கரவாதிகள் அப்பாவி ஆப்கானியர்களின் வீடுகளைத் தாக்கி, வீடுகளை சூறையாடி, 100 அப்பாவி மக்களைக் கொன்றனர்." என்றார்.
ALSO READ | தலிபான்கள் வசமாகும் ஆப்கானிஸ்தான்; இந்திய தூதரகம் மூடப்பட்டதா..!!
கடந்த வாரம் தலிபான்கள் ஸ்பின் போல்டக் என்னும் ஆப்கான் நகரை கைப்பற்றி கொள்ளையடித்தார்கள். பல தாலிபான் உறுப்பினர்கள் நகரத்தை கொள்ளையடித்தது, வீடுகளை சூறையாடியது மற்றும் அப்பகுதியிலிருந்து தப்பி ஓடிய அரசாங்க அதிகாரிகளின் வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற சம்பவத்தின் வீடியோ காட்சிகளை பிரான்ஸ் 24 வெளியிட்டது.
அவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் சந்தையில் சுற்றித் திரிவதும், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கொள்ளையடிப்பதையும், அவர்கள் ஒரு வீட்டில் தலிபான் கொடிகளையும் ஏற்றியதையும் வீடியோவில் காணலாம்.
காந்தஹாரின் மாகாண சபை உறுப்பினர் ஒருவர், அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய ஆட்கள் ஈகை திருநாளுக்கு ஒரு நாள் முன்பு தனது இரண்டு மகன்களை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து கொலை செய்தனர் என்றார். பல பொதுமக்களின் உடல்கள் இன்னும் ஸ்பின் போல்டக் நகரத்தில் தரையில் சிதறி கிடக்கின்றன என தெரிவித்தார்.
ALSO READ | Afghanistan: பரிதாப நிலையில் பெண்கள், போராளிகளுக்கு அடிமைகளாகும் பரிதாபம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR