Zombie Drugs: கொரோனா பிடியில் இருந்து தப்பி நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் அமெரிக்க இளைஞர்கள் வாண்டடாக அடுத்த பிரச்சனையை விலை கொடுத்து வாங்கி வருகிறார்கள். ஹாலிவுட் படங்களில் வரும் ஜாம்பி போல ஒரு சில இளைஞர்கள் மாறி வருகின்றனர். என்ன நடக்கிறது அமெரிக்காவில்? ஜாம்பி போல இளைஞர்கள் மாற என்ன காரணம்? விரிவாக பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவில் புதிதாக போதைப் பொருள் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. அதன் பெயர் tranq அல்லது Xylazine. இந்த போதைப் பொருளை பயன்படுத்துவதால் தோல் அழுகுவதோடு, ஜாம்பி போல மனிதர்கள் நடந்துகொள்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி அதிர்ச்சி அளிக்கிறது.  


இதனை Zombie Drug எனவும் அழைக்கிறார்கள். பொதுவாக இது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து அமைப்பால் அங்கிகரிக்கப்பட்ட மருந்து. இதனை விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வெட்னரி மருத்துவமனைகளில் அமெரிக்காவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதனை வைத்து தான் இந்த கொடூர போதைப் பொருள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுகிறது.


மேலும் படிக்க | இத்தாலியின் மிதக்கும் அழகிய வெனிஸ் நகரத்தின் ‘பரிதாப’ நிலை!


Xylazine மனிதர்களுக்கு பயன்படுத்தக் கூடாது. அதுவும் இதனை ஓவர் டோஸ் எடுத்துக்கொண்டால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.



Zombie Drugஐ பயன்படுத்தினால் அடுத்த சில நாட்களுக்கு தூக்கமே வராதாம். அதோடு தீவிர மன அழுத்தம், கை, கால்களில் மோசமான புண்கள் ஏற்படுமாம். அதனை அப்படி கவனிக்காமல் விட்டால் தோல் முழுவதும் பாதிப்படைந்து அழுகிவிடுமாம். 2021-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க்கில் மட்டும் இந்த போதைப் பொருளை அதிகமாக பயன்படுத்தியதால் 2,668 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் 


tranq-ஐ பயன்படுத்தியதும் உச்சகட்ட போதை அடைவதால், அதனை பயன்படுத்துபவர்கள் மிகுந்த உற்சாகம் அடைவார்களாம். அதோடு அவர்களுக்கு எங்கு இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் நினைவில் இருக்காதாம். ஜாம்பிக்கள் போல சாலைகளில் ஒருசிலர் சுற்றித்திரியும் வீடியோ வெளியான நிலையில், அவர்கள் இந்த போதைப் பொருளை பயன்படுத்தியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களிடமிருந்து இவர்கள் வேறுபட்டு தெரிகிறார்கள். 


tranq பயன்படுத்தி அதனால் பாதிக்கப்பட்ட 28 வயதான இளைஞர் ஒருவர் அமெரிக்க நாளிதழுக்கு அளித்த பேட்டியில், 9 மாதங்களுக்கு முன் அந்த போதைப் பொருளை ஒருமுறை பயன்படுத்தியதாகவும், இப்போது கால் மற்றும் பாதத்தில் ஓட்டை விழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


2021-ம் ஆண்டு மட்டும் நியூயார்க்கில் 2,668 பேர் இந்த போதைப் பொருளை அதிகமாக பயன்படுத்தியதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக அம்மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த போதைப் பொருளை அப்படியே தடுக்காமல் விட்டால், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட உலகம் முழுவதும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்


மேலும் படிக்க | Lasting Peace: ரஷ்யா உக்ரைன் மீதான போர் தொடங்கி ஓராண்டு நிறைவு! ஐநா தீர்மானத்தில் இந்தியா அதிருப்தி