எகிப்தில் மசூதி மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 235 பேர் பலியாகினர். மேலும் இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் எல் ஐரிஸ் என்ற நகரின் தலைநகரில் அல் ரவாடா பகுதியில் பிரசித்தி பெற்ற மசூதி உள்ளது. அப்போது துப்பாக்கியுடன் புகுந்த மர்மநபர் சுடத் துடங்கினான். அந்த மசூதி மீது பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதலும் நடந்தது. இதில் 235 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.


இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது


தாக்குதல் சம்பவத்தையடுத்து அந்நாட்டு அதிபர் அப்துல் பதா அல் சிசி, உயரதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். இரங்கல் தெரிவிக்கும் விதமாக மூன்று நாள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 


இந்த சம்பவத்துக்கு இந்திய பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய ஜனாதிபதி ராம்நாத்கோவிந்தும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.