பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீண்டும் பதவியை கைப்பற்றுவாரா?
Pakistan President Election 2024 : தற்போதைய பாகிஸ்தான் அதிபர் டாக்டர் ஆரிஃப் அல்வியின் ஐந்தாண்டு பதவிக் காலம் கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில் மார்சி 9ம் தேதி பாகிஸ்தான் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும்
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து, தற்போது நாட்டின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்டது. மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் வாக்கெடுப்பு தொடர்பாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நேற்று (2024 மார்ச் 1, வெள்ளிக்கிழமை) அறிவிக்கை வெளியிட்டது. நாட்டின் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, மீண்டும் பதவியில் அமர்வார் என்று அரசியல் வட்டாரங்கள் நம்புவதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய பாகிஸ்தான் அதிபர் டாக்டர் ஆரிஃப் அல்வியின் ஐந்தாண்டு பதவிக் காலம் கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில், பொருளாதார சீர்குலைவு உட்பட நாட்டில் நிலவிய பல்வேறு குழப்பங்கள் காரணமாக அவர் பதவியில் நீடித்த நிலையில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 8 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஆகஸ்ட் 2023 இல் தேசிய சட்டமன்றம் மற்றும் மாகாண சபைகள் கலைக்கப்பட்டதால், அதிபர் தேர்தல் நடத்த முடியவில்லை. பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளின் உறுப்பினர்கள் இணைந்ந்து நாட்டின் அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் அமைப்பை உருவாக்குகின்றனர்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் பிப்ரவரி 8 முடிவடைந்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் மற்றும் நான்கு மாகாண சபைகள் அனைத்திற்கும் புதிதாக உறுப்பினர்கள் வந்துவிட்டதால், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (ECP) அதிபர் தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டது.
உயர்மட்ட அரசியலமைப்பு பதவிக்கு போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் மார்ச் 2 ஆம் தேதி நண்பகல் வரை தங்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 4 ஆம் தேதி நடைபெறும், மார்ச் ஐந்தாம் தேதியன்று வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அதே நாளன்று வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும்.
பாகிஸ்தான் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு மார்ச் 9 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்திலும் அனைத்து மாகாண சட்டசபைகளிலும் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெற உள்ளது.
மேலும் படிக்க | தேர்தல் களம் சூடுபிடிச்சாச்சு! அரசியல் கட்சிகளுக்கே ஆப்பு வைக்கும் பொதுமக்கள்!
பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் பிபிபி மற்றும் பிஎம்எல்-என் கூட்டாக ஆசிப் அலி சர்தாரியை பரிந்துரை செய்துள்ளன. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) ஆகிய கட்சிகளால் கூட்டாக முன்மொழியப்பட்ட சர்தாரி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகல் பிரகாசமாக உள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சி ஆட்சியைத் தக்கவைப்பதைத் தடுக்க, இரண்டு கட்சிகளும், நான்கு சிறிய கட்சிகளும் சேர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை உருவாக்கின.
பாகிஸ்தானில் அதிக செல்வாக்குமிக்க இராணுவமும், இந்த முடிவை அங்கீகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் 68 வயதான சர்தாரி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ