அடுத்தாண்டு அமெரிக்காவில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள செனட் சபை பெண் எம்.பி. எலிசபெத் வாரன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 2020-க்குள் சிறை செல்வார் என தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த ஆண்டு நவம்பர் 3-ந் தேதி அமெரிக்கவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதேவேலையில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளர் ஆவதற்கு இந்திய வம்சாவளி பெண் எம்.பி. கமலா ஹாரிஸ், இந்திய வம்சாவளி இந்து எம்.பி. துளசி கப்பார்ட் போட்டியில் களம் இறங்கி இரங்கியுள்ளனர். இந்த வரிசையில் நியூஜெர்சி எம்.பி. கோரி புக்கர், நியூயார்க் எம்.பி. கிர்ஸ்டன் கில் பிராண்ட் ஆகியோரும் வேட்பாளர் போட்டியில் இறங்கி உள்ளனர்.


இவர்களை தொடர்ந்து செனட் சபை பெண் எம்.பி. எலிசபெத் வாரனும் (வயது 69) வேட்பாளர் போட்டியில் தானும் இருப்பதாக மசாசூசெட்ஸ் மாகாணம், லாரன்சில் உள்ள தனது வீட்டில் வைத்து நேற்றுமுன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.


இந்நிலையில்  இன்று தனது முதல் நாள் பிரச்சாரத்தினை துவங்கிய எலிசபெத்., "வரும் 2020-ஆம் ஆண்டு டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருக்க மாட்டார், சொல்ல போனால் அவர் சிறைக்கு சென்று எதிர்வரும் நாட்களை கழிப்பார்" என குறிப்பிட்டு பேசியுள்ளார். எலிசபெத்தின் இந்த அதிரடி வார்த்தைகள் நாட்டில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.