பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை, 44 கோடி அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கிய எலான் மஸ்க், கடந்த மாதம் அதன் தலைமை பொறுப்பை ஏற்றார். அவர் ட்விட்டரின் நிறுவனத்தின் அந்த உச்ச பொறுப்பை ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்களையும், செயல்பாட்டையும் மேற்கொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆட்குறைப்பு, ப்ளூ டிக் வெரிபிகேஷனுக்கு கட்டணம் உள்ளிட்டவை பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. எலான் மஸ்கின் இதுபோன்ற செயல்பாடுகளை நெட்டிசன்கள் பெரிதாக ரசிக்கவில்லை என்றே கூறப்பட்டது. அவரை பகடி செய்து நாள்தோறும் பல்வேறு மீம்கள் இணையத்தில் வலம் வருகின்றன. 


இந்நிலையில், எலான் மஸ்க் இன்று காலை ட்விட்டரில் ஒரு வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார். அதில், ட்விட்டரின் தலைமை பொறுப்பில் இருந்து தான் விலக வேண்டுமா, வேண்டாமா என வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 


தற்போது வாக்கெடுப்பு நிறைவடைந்து உள்ள நிலையில், அவர்  பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என 57.5 சதவீதத்தினரும், விலக வேண்டாம் என 42.5 சதவீதத்தினரும் வாக்களித்துள்ளதுள்ளனர். மொத்தம் இந்த வாக்கெடுப்பில், 1 கோடியே 75 லட்சத்து 2 ஆயிரத்து 391 பேர் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



மேலும் படிக்க | கடலில் மிதக்கும் நகரம்; ராட்சஸ கடல்மீன் வடிவில் 7000 பேர் வசிக்க கூடிய அதிசய நகரம்!


மேலும், அந்த வாக்கெடுப்பின் ட்விட்டர் பதவில்,"வாக்கெடுப்பு முடிவுகளுக்கு நான் கட்டுப்படுவேன்" என குறிப்பிட்டிருந்தார். எனவே, தற்போது தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதால், அவர் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவாரா என்ற கேள்வியெழுந்துள்ளது. இதுபோன்ற கொள்கை முடிவு சார்ந்த விஷயங்களுக்கு தொடர்ந்து ட்விட்டர் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அவர் பதிவிட்டிருந்தார். 



அதிரடி முடிவுகளை அறிவிப்பதில் பெயர் பெற்றவரான எலான் மஸ்க், தலைமை பொறுப்பில் இருந்து விலகுவாரா அல்லது இந்த வாக்கெடுப்பு முடிவுகளுக்கு சாக்குபோக்கு சொல்லப்போகிறாரா என இணைய உலகமே காத்திருக்கிறது.  


மேலும் படிக்க | பெண் பணியாளரின் பின்னாடி அறைந்த மேனேஜர்... இழப்பீடு இத்தனை லட்சமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ