Elon Musk China Visit: உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும்; X, Tesla, SpaceX போன்ற உலகளாவிய நிறுவனங்களின் நிறுவனமான எலான் மஸ்க் சமீபத்தில் தனது இந்திய பயணத்தை தள்ளிவைத்திருந்தார். செய்திருந்தார். அவரின் இந்தியா வருகையின்போது, Tesla நிறுவனத்தின் ஆலை மற்றும் அவரின் முதலீடுகள் இந்தியாவில் எங்கெங்கு செய்யப்பட உள்ளது என்பது குறித்து உறுதியாகும் என பேசப்பட்ட வந்த நிலையில், அவரின் பயண ஒத்திவைப்பு செய்தி வெளிவந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான Tesla, இந்தியாவில் தனது ஆலையை அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும், தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த ஆலைகள் அமைக்கப்படலாம் என தகவல்கள் கூறப்பட்டது. கடந்த ஏப். 10ஆம் தேதி அவர் தனது X பக்கத்தில்,"இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்" பதிவிட்டிருந்தார். 


எலான் மஸ்க் சீன பயணம்


ஆனால், ஏப். 20ஆம் தேதி அன்று எலான் மஸ்க்,"துரதிருஷ்டவசமாக, மிகவும் கடுமையான டெஸ்லா வேலைகள் இருப்பதால், இந்திய பயணம் ஒத்திவைக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நான் இந்தியாவுக்கு வருகை தருவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்றார். 


மேலும் படிக்க | இந்தியா - ஈரான் இடையே வரலாற்று சிறப்பு மிக்க சபஹர் துறைமுக ஒப்பந்தம்... மிக விரைவில்!


ஆனால், எலான் மஸ்க் திடீரென தற்போது சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான சீன வாரியத்தின் அழைப்பை ஏற்று இன்று சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு எலான் மஸ்க் வருகை தந்துள்ளார். இதனால், எலான் மஸ்க் சீனாவில் வளர்ந்துவரும் மின்சார வாகன சந்தையில், தனது டெஸ்லாவின் தானியங்கி தொழில்நுட்ப கார்களை அறிமுகப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இந்த பயணத்தில் சீன அரசின் மூத்த அதிகாரிகளை எலான் மஸ்க் சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 



அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை


சீனாவில் டெஸ்லா கார்கள்தான் மின்சார வாகனங்களிலேயே அதிகம் விற்பனையாகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் சீனாவில் டெஸ்லா கார்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. டெஸ்லா நிறுவனம் சீனாவில் ஷாங்காய் நகரில் ஏழு பில்லியன் அமெரிக்க டாலரில் தனது தயாரிப்பு ஆலையை அமைத்தது குறிப்பிடத்தக்கது. சீனாவில் தற்போது 2024 பெய்ஜிங் ஆட்டோ ஷா என்ற பெரும் வாகன கண்காட்சி நடைபெறுவதையொட்டி எலான் மஸ்கின் இந்த வருகை அமைந்துள்ளது. 


சீனாவில் முழுமையான தானியங்கி மென்பொருளை கொண்டுவருவது குறித்து எலான் மஸ்க் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. ஒரு நாட்டில் சேகரிக்கப்பட்ட தரவுகளை வெளிநாடுகளுக்கு மாற்றுவதற்கான ஒப்புதலைப் பெற இந்த பேச்சுவார்த்தை வழிவகுக்கும் என கூறப்படுகிறது.


டெஸ்லாவில் பணிநீக்கம்


கடந்த மூன்று ஆண்டுகளில் முதல்முறையாக இந்தாண்டு விற்பனை வீழ்ச்சியடைந்ததை டெஸ்லா சமீபத்தில் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு முன் சுமார் 14 ஆயிரம் ஊழியர்களை பாதிக்கக்கூடிய பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டார். 


இதுகுறித்து எலான் மஸ்க்,"இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, நாங்கள் நிறுவனத்தை முழுமையாக மதிப்பாய்வு செய்து, உலகளவில் எங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை 10 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைக்க வேண்டிய மிகவும் கடினமான முடிவை எடுத்துள்ளோம். இதில் வெறுப்பிற்கு இடமில்லை, ஆனால் இதை செய்தாக வேண்டும் செய்ய வேண்டும். இது எங்களுக்கு பயனளிக்கும்" என்றார். 


மேலும் படிக்க | ஆஹா... மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் வென்ற 60 வயது பெண் - யார் இந்த அழகி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ