டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்க் பிரபல சமூக நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கினார். இதனைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் 26 சதவீதம் வரை உயர்ந்தன. ட்விட்டரின் பங்குகளை வாங்கியதன் மூலம் அந்நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக எலன் மஸ்க் மாறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் எலன் மஸ்க்கும் இணையவுள்ளதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் அறிவித்துள்ளார். தங்கள் குழுவில் எலன் மஸ்க் இணைவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், தங்கள் நிறுவனத்திற்கு அவர் பெரும் மதிப்பைக் கொண்டு வருவார் எனவும் பராக் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | எனக்கு மரணத்தை கண்டு பயமில்லை: எலான் மஸ்க்



முன்னதாக, தனது ட்விட்டர் பக்கத்தில்  'எடிட் பட்டன்' வேண்டுமா? வேண்டாமா? என கருத்துக் கணிப்பை இன்று காலை எலன் மஸ்க் பதிவிட்டிருந்தார். ட்விட்டர் தளத்தில் எடிட் பட்டன் வேண்டுமென்பது அதன் பயனர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு ஆகும். ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய நிலையில் எலன் மஸ்க் வெளியிட்ட இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.  ட்விட்டரில் பயனாளிகளுக்கு கிடைக்கும் பேச்சு சுதந்திரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் எலன் மஸ்க் புதிய சமூக வலைதளம் பயனர்களுக்கு வேண்டுமா எனக் கேட்டும் ஒரு கருத்துக் கணிப்பை ட்விட்டரில் நடத்தியிருந்தார்.


மேலும் படிக்க | புதிய சோஷியல் மீடியா தளத்தை தொடங்குகிறாரா எலான் மஸ்க்? அவரே கூறிய பதில்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR