ட்விட்டர் ஊழியர்களுடன் முதல் முறையாக பேச்சுவார்த்தை நடத்தும் எலான் மஸ்க்
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு எலான் மஸ்க் முதன்முறையாக அந்நிறுவன ஊழியர்களுடன் எலான் மஸ்க் வரும் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மின்சாரக் கார் தயாரிப்பு, விண்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் தடம் பதித்து உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க், முன்னணி சமூக ஊடகமான ட்விட்டரை முழுமையாக வாங்கியுள்ளார். ஒரு பங்குக்கு 54 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையில் 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளார்.
இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும். ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த முழுமையான விவரங்களைத் தராவிட்டால் ஒப்பந்தத்தில் இருந்து விலக நேரிடும் எனவும் எலான் மஸ்க் எச்சரிதுள்ளார்.
மேலும் படிக்க | 10% ஊழியர்கள் வேலை நீக்கம்; ட்விட்டருக்குப் பதில் டெஸ்லாவில் கை வைத்த எலான் மஸ்க்
எலான் மஸ்க் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற பிறகு நிர்வாகம் எவ்விதம் இருக்கும் என்ற உறுதியான தகவல் இல்லாமல், அந்நிறுவன ஊழியர்கள் தங்களது எதிர்காலம் குறித்து குழப்பமான மனநிலையிலேயே உள்ளனர். ட்விட்டர் ஊழியர்கள் நிலை இப்படி இருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் டெஸ்லாவில் 10% ஊழியர்களை பணியில் இருந்து நீக்கவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், ட்விட்டரை வாங்கியதில் இருந்து முதன்முறையாக அந்நிறுவன ஊழியர்களுடன் எலான் மஸ்க் வரும் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதுகுறித்து ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதில் ஊழியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எலான் மஸ்க் பதிலளிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Elon Musk: 2022ம் ஆண்டில் இதுவரை ரூ.54,50,67,53,50,000 இழந்தார் எலோன் மஸ்க்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR