இலங்கையின் தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நாட்டில் மீண்டும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (2022, ஜூலை 17) பிற்பகுதியில் இந்த அறிவிப்பு வெளியானது.  முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில், மக்களின் அடிப்படைத் தேவையான மருந்துகள், எரிபொருள், உணவு என அத்தியாவசியப் பொருட்கள் முதல் அனைத்துமே விலை அதிகரித்தது. போராட்டங்கள், ஆட்சி மாற்றம், வன்முறை என அண்மை நாட்களாக சிக்கலின் உச்சியில் இருக்கும் இலங்கையின் நிலைமை மேலும் மோசமாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லங்கள் சூறையாடப்பட்டும், ஆக்ரமிக்கப்பட்டும் பல போராட்டங்களைக் கண்ட இலங்கையின் போராட்டம் ஜூலை 17 என்று 100வது நாளாக தொடர்ந்தது. இலங்கையின் தற்போதைய இக்கட்டான நிலைக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகச் சீர்கேடுதான் காரணம் என்று கூறப்படுகிறது. 


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்கேட்டினால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். அண்டை நாடான தமிழகத்திற்கு அகதிகளாக வரும் தமிழர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.


மேலும் படிக்க | நாடு நாடாக தப்பித்து செல்லும் அதிபர் கோத்தபய ராஜபக்சே


இலங்கையின் 22 மில்லியன் மக்கள்தொகை, கடந்த வருடத்தின் பிற்பகுதியில் இருந்தே உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர். அதிபருக்கு எதிரான போராட்டங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் டிக் டாக் என சமூக ஊடகப் பதிவுகள் மூலம் சூடு பிடித்தன.



அதிபர் ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்வதற்கான போராட்டங்களில், இன வேறுபாடுகளையும், மத மாச்சரியங்களையும் தாண்டி, ஏராளமான மக்கள் கலந்துக் கொண்டனர். 


இலங்கையில், சிங்களவர்களைத் தவிர, சிறுபான்மையினரான தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து போராட்டங்களை நடத்தினார்கள். கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி இரண்டு நாள் போராட்டமாக தொடங்கிய போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நூறாவது நாளையும் தொட்டுவிட்டது.


அதிபர், ராஜபக்சே ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தற்காலிக அதிபராக  நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் நடைபெறும் நாடாளுமன்ற வாக்கெடுப்பில்முன்னணி வேட்பாளராக இருக்கிறார் ரணில் விக்ரமசிங்கே.


மேலும் படிக்க |  இலங்கையில் பெரும் பதற்றம்; ரணில் வீடும் முற்றுகை; இலங்கை அதிபர் துபாய் தப்பி சென்றாரா...


மேலும் படிக்க | அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ