இரண்டு கட்டங்களாக நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரான் 65 சதவிகித வாக்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான், மற்கீம் இடது சாரிகள் சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.


இதில் மக்ரான் 65 சதவிகித வாக்குகளுடன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மெரீனை வீழ்த்தினார்.