எலோன் மஸ்க், அம்பானி எல்லாம் நெருங்க முடியாது... உலகின் பணக்கார பெண்மணி இவர் தானாம்!
உலக பணக்காரர்கள் என்றால் நம் மனதில் தோன்றும் பெயர்கள் எலோன் மாஸ்க், முகேஷ் அம்பானி, அதானி அவர்கள் தான். அனால், இவர்களை எல்லாம் விஞ்சும் அளவிற்கு வரலாற்றில் சீன பேரரசில் பெரும் பணக்காரராக ஒரு பெண் இருந்ததாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
World's Richest women: உலக பணக்காரர்கள் என்று சிந்திக்கும் போது, நம் மனதில் தோன்றும் பெயர்கள் எலோன் மாஸ்க், அமேசான் நிறுவனர் ஜெப் ஸ்பெசஸ், முகேஷ் அம்பானி, அதானி அவர்கள் தான். அனால், இவர்களை எல்லாம் விஞ்சும் அளவிற்கு வரலாற்றில் சீனாவில், பேரரசி ஒருவர் பெரும் பணக்காரராக இருந்ததாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. உலகின் பெரும் பணக்கார பெண்ணாக திகழ்ந்திருக்கிறார் சீனாவின் பேரரசி வூ (Empress Wu of China) என்கின்றனர் வரலாற்று வல்லுநர்கள்.
சீன பேரரசின் சொத்து மதிப்பு 16 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள்
உலகின் பெரும் பணக்கார பெண் என்பது பற்றி குறிப்பிடுகையில், சீனப்பேரரசி வூ உலகின் மிக பெரிய பணக்காரர் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவரின் சொத்து மதிப்பு எலோன் மஸ்க், முகேஷ் அம்பானி, அதானே எப்ப சோர்ஸ் ஆகியோரின் சொத்து மதிப்பை முறியடித்து விடும் என்கின்றனர். சீன பேரரசின் சொத்து மதிப்பு 16 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று அளவை எட்டியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பேரரசி வூ, தான் வாழ்ந்த சகாப்தத்தின் பணக்காரப் பெண்ணாக கருதப்படுகிறார்.
பேரரசி வூவின் சொத்து மதிப்பு 229 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
டாங் வம்சத்தைச் சேர்ந்த பேரரசி வூவின் சொத்து மதிப்பு 229 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என இருந்ததாக வரலாற்று வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 174 பில்லியன் டாலர்கள் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 106.2 பில்லியன் டாலர்கள் என உள்ளது குறிப்பிட்டுள்ளனர்.
பேரரசி வூ ஆட்சியில் செழித்த சீனப் பொருளாதாரம்
பேரரசி வூ அறிவு திறன் நிறைந்த ஆட்சியாளராக வரலாற்று ஆசிரியர்கள் சித்தரிக்கின்றனர். எனினும், அவர் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு உத்திகளைக் கையாண்டார். தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள சொந்த குழந்தைகளை கூட விட்டுவைக்கவில்லை என்கின்றனர் வராலாற்று நிபுணர்கள். அவர்களை நாடு கடத்தியதாக வரலாற்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏறக்குறைய 15 ஆண்டுகள் நீடித்த அவரது ஆட்சியின் போது, சீனப் பேரரசு மத்திய ஆசியாவில் பெரிய அளவில் விரிவடைந்ததாக கூறப்படுகிறது. அவரது ஆட்சியின் கீழ், சீனப் பொருளாதாரம் செழித்தது என்றும் தேயிலை மற்றும் பட்டு வர்த்தகத்தில் கணிசமான வளர்ச்சியை கண்டதாகவும், சீனாவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
ஆடம்பரமான வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் டிவி சீரியல் மற்றும் திரைப்படங்கள்
பேரரசி வூவின் செழுமையான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில், ஃபேன் பிங்பிங்-ல் (Fan Bingbing) இடம்பெற்ற "எம்பிரஸ் ஆஃப் சீனா" ("Empress of China") என்ற தொலைக்காட்சித் தொடர் உட்பட பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ