இன்றை துரிதாமான வாழ்க்கை முறையாலும், தவறான உணவுப் பழக்கத்தாலும், மனிதர்களின் உடல் பல நோய்களின் அடைக்கலமாக மாறி வருகிறது. அதுவும் இளைஞர்களுக்கும் மாரடைப்பு அபாயம் அதிகரித்து வருகிறது, ஆனால்  6 வயதான குழந்தை மாரடைப்பால் இறந்தது என்றால் நம்ப முடியவில்லை அல்லவா.... உங்களுக்கு இது ஆச்சரியமாகவும் அதிர்ச்சிகரமாகவும் இருக்கலாம், ஆனால் இது வடகிழக்கு மெக்சிகோவில் நடந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனர்ஜி  பானத்தை குடித்ததால் மரணம்


தி மிரர் இதழில் வெளியான செய்தியில், வடகிழக்கு மெக்ஸிகோவில் உள்ள மாடமோரோஸில் 6 வயது சிறுவன் ஒரு கிளாஸ் மான்ஸ்டர் எனர்ஜி பானத்தை குடித்த பின் இறந்ததாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 16 ஆம் தேதி பிரான்சிஸ்கோ செர்வாண்டஸ் தனது பாட்டி வீட்டிற்குச் சென்ற போது இந்த சோகமான சம்பவம் நடந்தது.


ஆற்றல் பானங்கள் குடிப்பதால் ஏற்படும் அசௌகரியம்


பிரான்சிஸ்கோ செர்வாண்டஸ் என்ற அந்த சிறுவன் தனது தாகத்தைத் தணிக்க மான்ஸ்டர் எனர்ஜி ட்ரிங்க்கை (ஒரு வகை ஆற்றல் பானம்) குடித்தார். ஆற்றல் பானத்தை குடித்த பிறகு, குழந்தை பதற்றத்தை உணரத் தொடங்கியது. அவரது உறவினர்கள் அவரை உள்ளூர் ஆல்ஃபிரடோ புமரேஜோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்


6 நாட்கள் கோமா நிலையில் இருந்த சிறுவன்


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மூளை செயலிழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரான்சிஸ்கோ பின்னர் ஆறு நாட்கள் கோமா நிலையில் இருந்தார், ஏனெனில் அவரது தாயார் ஜெசிகா ஆரம்பத்தில் அவரை செயற்கை உயிர் ஆதரவு இயந்திரத்திலிருந்து அகற்ற அனுமதிக்கவில்லை.


காஃபின் மற்றும் சர்க்கரை கொண்ட எனர்ஜி பானங்கள்


 6 வயதான பிரான்சிஸ்கோ செர்வாண்டஸ் ஏற்கனவே ஏதேனும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டாரா இல்லையா என்பது தெரியவில்லை. இருப்பினும், NHS உட்பட பல்வேறு சுகாதார நிபுணர்கள், அதிக அளவு காஃபின் மற்றும் சர்க்கரை கொண்ட எனர்ஜி பானங்களை உட்கொள்ள வேண்டாம் என்று இளம் குழந்தைகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


மான்ஸ்டர் எனர்ஜி டிரிங்க் 


குழந்தை இறந்த பிறகு, மான்ஸ்டர் எனர்ஜி ட்ரிங்க் நிறுவனத்திடம் இருந்து இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை. துரதிஷ்டவசமாக என் மகன் இனி இந்த உலகத்தில் இல்லை, இனி அவனை உயிருடன் திரும்ப கொண்டு வர முடியாது என்று பிரான்சிஸ்கோவின் தாய் அழுதபடியே கூறினார்.


மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR