உயிரிழந்த கணவர் மூலம் 2 வருடங்கள் கழித்து குழந்தை! கணவரே பிறந்ததாக கொண்டாடும் பெண்!
இங்கிலாந்தில் பெண் ஒருவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த தனது கணவர் மூலம் அழகிய ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.
இங்கிலாந்து லிவர்பூலில் வசித்து வருகிறார் லூரான். இவரது கணவர் ஜெரிஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அந்த சமயத்தில் தான் குழந்தை பெற்றுக்கொள்ள இந்த ஜோடி திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. அப்போது ஜெரிஷ்க்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை சென்று பரிசோதித்த போது அவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனலிக்காமல் அவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் உயிரிழந்தார்.
மேலும் படிக்க | உலகின் மிக அழகான பெண் என்கிற பெருமையை பெற்றார் ஆம்பர் ஹெர்ட்!
கணவர் உயிரிழந்ததை அடுத்து லூரான் மிகவும் உடைந்து போனார். ஆனால் உயிரிழக்கும் முன்பு ஏற்கனவே திட்டமிட்ட படி ஜெரிஷ் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய லூரான், மருத்துவர்கள் உதவியுடன் கணவரின் விந்தணுக்களை சேகரித்து வைத்துள்ளார். இதற்கு ஜெரிஷும் அப்போது சம்மதம் தெரிவித்துள்ளார்.
பிறகு மூளைக்கட்டியால் ஜெரிஷ் இறந்ததும், சிறிது காலம் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவரது மனைவி லூரான் கணவரின் விந்தணுக்கள் மூலம் செயற்கை முறையில் கருத்தரிக்க முடிவெடுத்துள்ளார். அதன்படி மருத்துவர்களை அவர் அணுகியுள்ளார். அவர்களும் ஐவிஎஃப் முறைப்படி ஜெரிஷின் விந்தணுக்களை லூரான் உடைய கருப்பையில் செலுத்தியுள்ளனர். இதனால் அவர் கர்ப்பமாகியுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு கடந்த 17-ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள லூரான், தனது கணவர் போலவே குழந்தை உள்ளதாக பூரிப்படைந்துள்ளார். தனது கணவருக்கு M வடிவில் மண்டை இருக்கும் என்றும், அதே போல தனது மகனுக்கும் இருப்பதாகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தனது தந்தை எங்கே என குழந்தை கேட்கும் நிலை வராது என்றும், தந்தையின் பரிசத்தை குழந்தை உணர்வான் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | Pornhub: ப்ரோன்ஹப் நிறுவனத்தின் உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா: அதிர வைக்கும் பின்னணி
ஏற்கனவே ஜெரிஷ்-க்கு மற்றொரு பெண் மூலம் 18 வயதில் மகன் உள்ள நிலையில், தற்போது மற்றொரு மகன் பிறந்துள்ளார். ஜெரிஷின் முதல் மகன் தன் மகனுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து உதவுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் லூரான்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR