உயிர் நாட்டுக்கு! உடல் ஒட்டுண்ணிக்கு!!
வட கொரியப் படைவீரர்களின் உடலில் `அதிக அளவிலான ஒட்டுண்ணிகள்` காணப்படுகின்றன..
வட கொரியா ராணுவ வீரர் ஒருவர் எல்லையை தாண்டி ஓடும் போது சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது குடலினுள் ஒட்டுண்ணிகள் மிக அதிகமாக இருந்தன.
பன்முஞ்ஜோமில் பிற ராணுவ வீரர்களுடன் சென்று கொண்டிருந்த பொது வட கொரிய படைவீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தென் கொரியாவில் ஒரு மருத்துவமனையில் விரைந்து சென்று அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது, உடலில் புழுக்கள் "அதிக எண்ணிக்கையில்" இருப்பதாகவும் அவரின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதையும் பிபிசி தெரிவித்தது.
"நான் மருத்துவராக பணிபுரிந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு நோயாளியை பார்த்ததில்லை" என்று தென் கொரிய மருத்துவர் லீ குக்-ஜொங் கூறினார், நோயாளியின் குடலிலிருந்து நீக்கப்பட்ட நீண்ட புழு 27 செ.மீ நீளமாக இருந்தது.
"அவரின் உடல்நிலையை கண்கணித படியே இருந்தோம்" என்றும் "அதிக எண்ணிக்கையிலான ஒட்டுண்ணிகள்" படைவீரரின்சிறு குடலில் காணப்பட்டதாக லீ தெரிவித்தார்.
வட கொரியாவில் ஒட்டுண்ணிகள் பரவலாகக் காணப்படுகின்றன, மேலும் பெரும்பாலும் சுத்தமற்ற காய்கறிகளை உட்கொள்வதன் விளைவாக இருக்கலாம் என்றும் கூறினார்.
"சில ஒட்டுண்ணிகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும்," என்று சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பீட்டர் பிரேஸர் கூறினார்.
"உடலில் நீண்ட காலமாக ஒட்டுண்ணிகள் இருந்திருந்தால் நோயாளிகள் பலவீனமான நிலையில் இருப்பார்கள், இதனால் எந்த காயங்களும் அறுவை சிகிச்சையும் மிகவும் ஆபத்தானதாக இருக்கும்" என்று பேராசிரியர் பிரேஸர் தெரிவித்தார்.