G20 உச்சிமாநாடு தொடங்கவிருக்கும் நிலையில், ​​ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen கூறிய கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க வேண்டிய "சிறப்புப் பொறுப்பு" வளர்ந்த நாடுகளுக்கு உள்ளது என்று அவர் கூறுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

G20 உச்சிமாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக, உலகத் தலைவர்கள் பலரும் ஐரோப்பாவிற்குச் சென்றுக் கொண்டிருக்கின்றனர்.  இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து "Just Energy Transition" கூட்டாண்மையில் பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய ராஜ்ஜியம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், அமெரிக்காவும் செயல்பட்டு வருவதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen தெரிவித்தார்.


மீத்தேன் வாயு உமிழ்வை கட்டுப்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. பூமியின் வெப்ப நிலை அதிகரித்து வருவதற்கு பெருமளவுக்கு மீத்தேன் வாயு காரணம் என்று   அண்மையில் வெளியான பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டுக் குழு (ஐபிசிசி) ஆய்வறிக்கை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.  


Also Read | இந்தியாவின் அக்னி-5; சீனாவின் டிஎஃப்-17 ஏவுகணை! கேம் சேஞ்சர் எது?


பூமியில் வெப்பநிலை உயர்வதில் சுமார் 50 சதவீதத்திற்கு காரணம் மீத்தேன் வாயு என்று கூறப்படுகிறது. காலநிலை மாற்றம் குறித்து நாடுகளை எச்சரிக்கும் அவர், ​​"மீளமுடியாத நிலையை உலகம் அடைந்துவிடும் அபாயமும் உள்ளது" என்று கவலை தெரிவிக்கிறார். மீத்தேன், கரியமில வாயுவை விட 80 மடங்கு அதிகமாக வெப்பமடைகிறது" என்றும் அவர் கூறுகிறார்.


உலகம் முழுவதும் உள்ள காடுகளைப் பாதுகாப்பதற்காக 1 பில்லியன் யூரோக்களை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் என்று கூறிய லேயன், காடுகளே பருவநிலை மாற்றத்திற்கு முக்கியமான தீர்வு என்றும் எனவே காடு வளர்ப்பிற்கு  "முன்னுரிமை"  கொடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  


 "காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் காடுகள் நமது சிறந்த கூட்டாளிகள், எனவே அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும்" என்று லேயன் மேலும் கூறினார்.


தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து "Just Energy Transition" கூட்டாண்மையில் பிரான்ஸ், ஜெர்மனி, EU, UK மற்றும் US செயல்பட்டு வருவதாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் தெரிவித்தார்.


Read Also | உலகிலேயே மிகப் பழமையான Pyramid ரகசியத்தை சீனா மறைப்பது ஏன்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR