உலகின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற பின்லாந்து பெண்
உலகின் மிக இளம் வயது பிரதமராக பின்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஆனார்.
உலகின் மிக இளம் வயது பிரதமராக பின்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஆனார்.
கடந்த ஏப்ரல் மாதம் பின்லாந்து நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், சமூக ஜனநாயக கட்சி வெற்றி பெற்று நான்கு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. இந்த கட்சியை சேர்ந்த அண்டி ரின்னே, பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில் பின்லாந்தில் இரண்டு வாரங்களாக நடைபெற்ற தபால் துறை வேலைநிறுத்த விவகாரத்தை, பிரதமர் அண்டி ரின்னெ சரியாக கையாளவில்லை என்பதால் அக்கட்சிகள் விலக்கிக் கொண்டன. இதனால் கடந்த 3ம் தேதி அண்டி ரின்னே பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து சமூக ஜனநாயக கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் சன்னா மரின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சன்னா மரின் தனது 27 வது வயதில் டம்பியரில் நகர சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2015ம் ஆண்டு பின்லாந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த ஜூன் மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில் 34 வயதான சன்னா மரின், பின்லாந்து நாட்டின் பிரதமராக பதிவேற்றதன் மூலம் உலகில் ஆட்சியில் இருக்கும் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.