சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பாக வெடிகுண்டு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் ஒன்று கேட்டுள்ளது. அப்பகுதியில் தனிநபர் ஒருவர் தனது உடலில் இருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளார். சிறிய வெடிகுண்டு என்பதால் அருகில் இருந்த மக்களுக்கு எத காயமும் ஏற்படவில்லை. வெடிகுண்டை வெடிக்கச் செய்த நபர் மட்டும் காயங்களுடன் தப்பியுள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.  



மேலும், குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் அருகேயே இந்திய மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் அமைந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்த குண்டு வெடிப்பால் நகரில் எந்த வித பாதிப்பு இல்லை எனவும், யாரும் படுகாயம் அடையவில்லை எனவும் சீன அரசாங்கம் உறுதியளித்துள்ளது.



இதனிடையே தூதரங்கள் இருக்கும் பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வரும் நிலையில், குண்டு வீசிய மர்ம நபர் குறித்தும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.