அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வங்கிகள் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் இரு பெரும் வங்கிகள் அடுத்தடுத்து திவாலானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அங்குள்ள மற்ற வங்கிகளும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்பட்டது. அமெரிக்காவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் மற்றும் பல்வேறு நிதி சேவைகளை வழங்கி வந்த சிலிகான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகியவை கடந்த மார்ச் மாதம் திவாலாகிய நிலையில் அமெரிக்காவில் 3 ஆவது பெரிய வங்கியாக உள்ள, First Republic Bank வங்கியும் திவாலாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திங்களன்று ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி கைப்பற்றப்பட்டதாகவும், இரண்டு மாதங்களில் தோல்வியடைந்த இந்த மூன்றாவது பெரிய அமெரிக்க நிறுவனமான ஜேபி மோர்கன் சேஸ் & கோ நிறுவனத்திற்கு வங்கியை விற்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.


சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு, இயங்கி வரும் பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி திவால் நிலைக்குத் தள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு துவங்கப்பட்ட பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி அமெரிக்காவின் பெரிய வங்கியாக இயங்கி வந்தது. நியூயார்க், கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை ஒட்டிய 8 மாகாணங்களில் 84 கிளைகளுடன் இந்த வங்கி செயல்பட்டு வந்தது.


அமெரிககாவின் 8 மாகாணங்களில் உள்ள பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் 84 கிளைகள் ஜேபி மோர்கன் சேஸ் வங்கியின் பெயரில் இயங்கும் என அமெரிக்க பெடரல் அமைப்புத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மூன்றாவது பெரிய வங்கியின் $173 பில்லியன் கடன்கள், $92 பில்லியன் வைப்புத்தொகை உட்பட, வங்கியின் $30 பில்லியன் பத்திரங்களையும் தனது நிறுவனம் எடுத்துக் கொள்ளும் என்று JPMorgan ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் பங்குகள் சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் 36 சதவீதம் சரிந்தன. இந்த ஆண்டு பங்கு மதிப்பு 97 சதவீதம் குறைந்துள்ளது. 


மேலும் படிக்க | பிணங்களை வன்புணர்வு செய்யும் நெக்ரொபிலியாக்கள்... கல்லறைக்கு பூட்டு போடும் அவலம்!


முன்னதாக, கடந்த மார்ச் மாதம், சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி ஆகியவை திவாலானதை தொடர்ந்து சந்தைகளை நிலைப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை பெடரல் ரிசர்வ் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜேபி மோர்கன் 2021 ஆம் ஆண்டு முதல் கையகப்படுத்தல் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை $5 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஒப்பந்தங்கள் மூலம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.


அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான ஜேபி மோர்கன் இப்போது பர்ஸ் ரிபளிக் வங்கியை கையகப்படுத்திய நிலையில், மிகப்பெரிய வங்கியாக உருவெடுத்துள்ளது. SVB மற்றும் சிக்னேச்சர் வங்கியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியும் நெருக்கடியில் சிக்கியது. பணக்கார வாடிக்கையாளர்கள் பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியில் இருந்து டெபாசிட்களை திரும்பப் பெறத் தொடங்கினர், இதனால் வங்கி திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | பெனின்சுலாவிலும் இனி தீபாவளிக்கு தேசிய விடுமுறை! அமெரிக்க மாகாணம் அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ