பெனின்சுலாவிலும் இனி தீபாவளிக்கு தேசிய விடுமுறை! அமெரிக்க மாகாணம் அறிவிப்பு

Pennsylvania Deepavali Celebration: தீபாவளிக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கொடுத்த அமெரிக்க மாகாணம் பென்சில்வேனியா! அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் இந்து சமூகத்தினர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 27, 2023, 05:01 PM IST
  • தீபாவளிக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம்
  • அமெரிக்க மாகாணம் பென்சில்வேனியாவில் தீபாவளிக்கு தேசிய விடுமுறை
  • தீபாவளியின் ஒளி அனைவரையும் இணைக்கட்டும்
பெனின்சுலாவிலும் இனி தீபாவளிக்கு தேசிய விடுமுறை! அமெரிக்க மாகாணம் அறிவிப்பு title=

அமெரிக்காவின் பென்சில்வேனியா தீபாவளியை தேசிய விடுமுறையாக அறிவித்துள்ளது. தீபாவளி என்பது ஐந்து நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்படும் இந்துக்களின் ஒரு புனிதமான பண்டிகை ஆகும். தீபாவளி பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்கின்றனர். முழு உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளிக்கு மற்றொரு அமெரிக்க மாகாணமும் அதிகாரபூர்வ அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  பிரமாண்டத்துடனும் கொண்டாடப்படுகிறது தீபாவளி. 

பிப்ரவரி 2023 இல் பென்சில்வேனியாவில் தீபாவளியை அதிகாரப்பூர்வ அரசு விடுமுறையாக மாற்றுவதற்கான சட்டத்தை செனட்டர் கிரெக் ரோத்மேன் மற்றும் செனட்டர் நிகில் சவால் ஆகியோர் முன்வைத்தனர்.

இந்து பண்டிகை தீபாவளி

இந்து பண்டிகையான தீபாவளியை தேசிய விடுமுறையாக பென்சில்வேனியா அறிவித்துள்ளது என்று செனட்டர் நிகில் சவால் ட்வீட் செய்துள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரியில் பென்சில்வேனியாவில் தீபாவளியை அதிகாரப்பூர்வ அரசு விடுமுறையாக மாற்றுவதற்கான சட்டத்தை மாநில செனட்டர் கிரெக் ரோத்மேன் மற்றும் சவால் முன்வைத்திருந்தனர்.  

"தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அங்கீகரிப்பதற்காக செனட் ஒருமனதாக வாக்களித்தது! தீப ஒளி மற்றும் இணைப்பின் திருவிழாவை அனைத்து பென்சில்வேனியர்களும் கொண்டாடலாம். உங்களை வரவேற்கிறோம்" என்று சவல் ட்வீட் செய்துள்ளார்.

இதற்கிடையில், செனட்டர் கிரெக் ரோத்மேன், இந்த சட்டத்தை இணை ஸ்பான்சர் செய்ய ஒப்புக்கொண்டதற்காக சவாலுக்கு நன்றி தெரிவித்தார். 

பென்சில்வேனியாவில் தீபாவளி

"பென்சில்வேனியாவில் தீபாவளியை அங்கீகரிப்பதற்கான எனது சட்டம் PA செனட்டில் 50-0 என்ற கணக்கில் நிறைவேற்றப்பட்டது. இன்றைய வாக்குகள் நமது காமன்வெல்த்தின் வளமான கலாச்சார பன்முகத்தன்மையை நிலைநிறுத்துகிறது மற்றும் கொண்டாடுகிறது. இந்தச் சட்டத்தை ஒத்துழைக்க ஒப்புக்கொண்டதற்கு @SenatorSaval நன்றி."

பென்சில்வேனியா மாகாணத்தில் 600,000 க்கும் மேற்பட்ட ஆசிய அமெரிக்கர்கள் வசிக்கின்றனர், அவர்களில் இந்திய அமெரிக்கர்கள் மிகப்பெரிய அளவில் இருக்கின்றனர். மாகாணத்தில் உள்ள கிட்டத்தட்ட 200,000 இந்திய அமெரிக்கர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை கோலாகலமாகவும் விமரிசையாகவும் கொண்டாடுகிறார்கள்.

"ஒவ்வொரு ஆண்டும், நமது மாகாணம் முழுவதும் உள்ள கோயில்கள், வழிபாட்டு தளங்கள் மற்றும் சமூக மையங்களில் தீபாவளியின் ஒளி மற்றும் இணைப்பின் திருவிழா கொண்டாடப்படுகிறது" என்று செனட்டர் சவல் கூறினார்.

மேலும் படிக்க | Karnataka Election: ஜெகதீஷ் ஷெட்டரை மண்ணை கவ்வ வைக்க பாஜக திட்டம்! அமித் ஷா மீது புகரளித்த காங்கிரஸ்

2023 நவம்பர் 12 தீபாவளி

இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 12 அன்று கொண்டாடப்படும். இந்த ஆண்டு முதல் தீபாவளியை பென்சில்வேனிசா அரசு தேசிய விடுமுறையாக அறிவிக்கும். 

தீபாவளிக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம்

"எங்கள் காமன்வெல்த் தீபாவளிக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் ஒவ்வொரு ஆண்டும் ஒளி மற்றும் இணைப்பு விழாவைக் கொண்டாடும் ஆயிரக்கணக்கான பென்சில்வேனியர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது: நீங்கள் பார்க்கிறீர்கள், நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள், நீங்கள் முக்கியம்," என்று சவல் கூறினார்.

“எனது சக ஊழியர், செனட்டர் ரோத்மேனுக்கு, இந்த மசோதாவைத் தனது அங்கத்தினர்கள் சார்பாகவும், பென்சில்வேனியாவின் கிட்டத்தட்ட 200,000 தெற்காசிய குடியிருப்பாளர்கள் சார்பாகவும் தொடங்குவதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இருளுக்கு எதிரான ஒளியின் முடிவில்லா போராட்டத்தின் பிரதிபலிப்பிற்காக தீபாவளி பண்டிகைக்கான விடுமுறை மாகாணம் முழுவதும் நீட்டிக்கப்படுவது பொருத்தமானது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: கொல்கத்தாவை வதம் செய்த சிஎஸ்கே... புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

மாகணத்தில் தீபாவளி சடங்குகள்

2002 ஆம் ஆண்டில், வெள்ளை மாளிகையில் முதல் முறையாக விளக்குகளின் திருவிழா கொண்டாடப்பட்டது மற்றும் 2007 ஆம் ஆண்டில், அமெரிக்க அரசாங்கம் திருவிழாவிற்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கியது. அப்போதிருந்து, இந்திய சமூகத்தால் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் தீபாவளி கொண்டாடப்பட்டது.

2021 ஆம் ஆண்டில், அமெரிக்க அரசாங்கம் தீபாவளி தினத்தை கூட்டாட்சி விடுமுறையாக அறிவிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று அமெரிக்க தூதரகம் மின்விளக்குகள் மற்றும் தீபங்களால் அலங்கரிக்கப்படுகிறது. நியூயார்க்கில் உள்ள ஹட்சன் நதிக்கரையில், இந்திய அமெரிக்கர்கள் அதிக எண்ணிக்கையில் கூடி, பண்டிகையைக் கொண்டாடுகின்ரானர். அதேபோல, உலக வர்த்தக மையத்தில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: ஐபிஎல் போட்டியால் காத்திருக்கும் ஆபத்து! சமாளிக்குமா பிசிசிஐ?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News