நியூயார்க்: கோவிட் -19 பாதிக்கப்பட்ட "ஜெர்மன் ஷெப்பர்ட்" நாய் அமெரிக்காவில் இறந்துவிட்டது. ஒரு நாய் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளது என உறுதிப்படுத்தப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும். ஸ்டேட்டன் தீவைச் (Staten Island) சேர்ந்த ராபர்ட் மற்றும் அலிசன் மஹோனி ஆகியோர் நேஷனல் ஜியோகிராஃபிக் (National Geographic) பத்திரிகையிடம், தங்கள் ஏழு வயது நாய் 'பட்டி' (Buddy) ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், பல வாரங்களாக நோய்த்தொற்றின் பிடியில் இருந்ததாகவும் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மே மாதத்தில் கால்நடை மருத்துவரிடம் சோதனை மேற்கொண்டதில் பட்டிக்கு (நாயின் பெயர்) கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நாட்டில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதல் நாய், நியூயார்க்கில் வாழும் "ஜெர்மன் ஷெப்பர்ட்" (German shepherd) என்று அமெரிக்க வேளாண்மைத் துறை ஜூன் மாதம் செய்தி வெளியிட்டது. 


ALSO READ | தொப்புள் கொடி வழியாக கருவில் இருந்த குழந்தைக்கு பரவிய கொரோனா...!


நாய் பட்டியின் உடல்நிலை மோசமடைந்தது. ஜூலை 11 அன்று அந்த நாய் மரணம் அடைந்தது. அதற்கு புற்றுநோயை இருப்பதும் இரத்த பரிசோதனையில் கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக அது இறந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.


அமெரிக்காவில் பல விலங்குகளில் கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று இருப்பதை வேளாண்மைத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை 12 நாய்கள், 10 பூனைகள், ஒரு புலி மற்றும் சிங்கம் ஆகியவை கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. விலங்குகளிடமிருந்து கொரோனா வைரஸ் பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று வேளாண்மைத் திணைக்களம் கூறியது. ஆனால் சில சூழ்நிலைகளில் நோய்தொற்று மக்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவக்கூடும் என்றும் கூறப்பட்டு உள்ளது.


ALSO READ | முகமூடி அணியாமல் உலா அந்த ஆட்டுக் குட்டியை கைது செய்த காவலர்!!