வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி அவர் நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 


இந்நிலையில் இது தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா குற்றவாளி என்றும் அவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டணை விதிக்கப்படுவதாகவும்  நீதிபதி அத்தருஜாமான் இன்று உத்தரவிட்டார்.


கடந்த பிப்ரவரி மாதம், மற்றோரு ஊழல் வழக்கு தொடர்பான தீர்ப்பில் கலிதா ஜியாவிற்கு 5 ஆண்டு சிறை தண்டணை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.