சவுத்ரி சர்க்கரை ஆலைகள் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் கைது செய்யப்பட்டுள்ளார். சவுத்திரி சர்க்கரை ஆலை முறைகேடு வழக்கில் பாக். முன்னாள் பிரிதமர் ஷெரீப்பை தேசிய ஊழல் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர். ஷெரீப் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டதால் நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் தலைவர்களும் தொழிலாளர்களும் நீதிமன்றத்திற்கு வந்தனர். NAB 15 நாள் ரிமாண்டிற்கு வாதிட்டபோது, ஷெரீப்பின் வழக்கறிஞர் சவுத்ரி சர்க்கரை ஆலைகளுடன் ஒருபோதும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறி அதை எதிர்த்தார்.


முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினர் மீது சவுத்ரி சர்க்கரை ஆலையின் பங்குகளை விற்பது மற்றும் வாங்குவதில் முறைக்கேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில், நவாஸ் நேரடி தொடர்பில் இருந்தார் எனவும் கூறப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நவாஸை கைது செய்த லாகூர் காவல்துறையினர், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் துணை தலைவரும், நவாஸின் மகளும் ஆன மர்யம், மற்றும் அவரது உறவினர் யூசப் அப்பாஸ் மீது கட்சிக்கு சந்தேகத்திற்கு இடமாக பில்லியன் கணக்கில் பணப்பரிவர்தனை நிகழ்ந்ததாக ஆதாரங்களுடன் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கில் நவாஸ்க்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின், உடல்நலக்குறைவை சுட்டிக்காட்டிய அவருக்கு 15 நாட்கள் ஜாமின் வழங்கப்பட்டது. இந்த வழக்கு போலியானது, எந்தவித முகாந்திரமும் இல்லை எனவும், ஒருநாள் கூட கைது செய்து சிறையில் அடைக்கக் கூடாது எனவும் நவாஸின் வழக்கறிஞர் வாதிட்டாலும், கோர்ட், கேட்பதாக இல்லை. இந்நிலையில், நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டு, லாகூர் பொறுப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.


"நவாஸ் ஷெரீப்பின் சொத்துக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல" என்று ஷெரீப்பின் வழக்கறிஞர் அம்ஜத் பர்வேஸை மேற்கோள் காட்டி டான் நியூஸ் தெரிவித்துள்ளது.


ஷெரீப்புக்கு எதிரான கைது வாரண்ட் 2019 அக்டோபர் 4 ஆம் தேதி NAB தலைவர் நீதிபதி ஜாவேத் இக்பால் பிறப்பித்ததாக பாகிஸ்தானின் ARY செய்தி தெரிவித்துள்ளது. சவுத்ரி சர்க்கரை ஆலைகள் வழக்கில் புலனாய்வாளர்களுடன் ஒத்துழைக்கவில்லை என்று என்ஏபி கூறியதையடுத்து முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டார்.