Former Pornster Mia Khalifa Viral Video in Tamil:  முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலீஃபா ஒரு யூத பெண்ணுடன் மோதலின் வீடியோவை வெளியிட்டார். அது சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த வீடியோ, X தளத்தில் பகிரப்பட்டது மற்றும் மேலும் அந்த அடையாளம் பெண் தன்னைப் பின்தொடர்ந்ததாக மியா தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மியா கலீஃபாவின் X பதிவு


மியா கலீஃபா தனது பதிவில்,"சியோனிஸ்டுகள் நிதானத்தை இழக்கிறார்கள். அந்த பெண் என்னை அவதூறாக பேசி படியே, லாபி வழியாக என்னைப் பின்தொடர்ந்தாள். பழங்கால நகை கண்காட்சியில் உபேர் காருக்காக காத்திருந்த நேரம் முழுவதும் அவள் அவதூறாக பேசுவதை நிறுத்தவில்லை. அவர் ஒரு விற்பனையாளர் என நினைக்கிறேன். அவள் மிகவும் தெளிவாகச் சொன்னாள், அதனால் அவளுடைய வணிகம் இதுதான் என்று நான் நினைக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 



கடந்தாண்டு அக்.7ஆம் தேதி இஸ்ரேலிய எல்லைக்குள் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். குறிப்பாக, இஸ்ரேல் - ஹமாஸ் போரில் மியா கலிஃபா பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் படைக்கு தனது ஆதரவை தெரிவிப்பது மட்டுமின்றி, அவர்கள் 'சுதந்திர போராளிகள்' என்றும் அழைத்து வந்தார். இதற்கு அவருக்கு பொதுவெளியில் பலத்த எதிர்ப்பும் கிளம்பியது இங்கு குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | நீலப் பொருளாதரத்தை கைப்பற்ற முயலும் சீனாவின் சதி! கடன் பொறிக்குள் சிக்கும் மாலத்தீவு!


நெக்லஸை காட்டும் பெண்மணி


மியா கலிஃபா பகிர்ந்த அந்த 43-வினாடி வீடியோவில், மியாவுக்கு பின்னால் இருந்த பெண் "அது சரி" என்று சொல்வதை கேட்க முடிகிறது. மேலும், அந்த பெண்மணிக்கு அருகில் நிற்கும் ஒருவரை நோக்கி மியா,"நீ உன் தாயாரை நினைத்து பெருமைப்படுகிறாயா...?" என கேள்வி எழுப்பினார். 


"Am Yisrael Chai" என்று அந்த பெண் அதற்கு பதிலளித்தார். இது யூத மக்களிடம் ஒற்றுமையாக பரவலாகப் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். வீடியோவில் அந்தப் பெண் பலமுறை இந்த சொற்றொடரை மீண்டும் மீண்டும் சொல்கிறார். மேலும், அந்த பெண்மணி 'அதை நீங்கள் பார்க்கிறாயா" என்று கேட்கும் விதமாக தனது கழுத்தில் உள்ள நெக்லஸை காட்டினார்.


இருப்பினும், மியா அந்த பெண்ணிடம்,"நீ பேருந்துக்காகக் காத்திருக்கிறாயா? ஏனென்றால் நான் என் காருக்காக காத்திருக்கிறேன்" என்றார். உடனே அந்த பெண் மியாவின் பின்னால் இருந்து வந்து, தனது நகையை வெளியே காட்டி, "Am Yisrael Chai" என்றார். அப்போது மியா, அந்த பெண் பேசும்போது துர்நாற்றம் அடிப்பதாக கூறி தள்ளிப்போகும்படி சொல்கிறார். இருப்பினும், இவர்களுக்கு இடையேயான பிரச்னைக்கு அடிப்படை என்பது இதில் உறுதியாகவில்லை எனலாம். 


இந்த மோதல் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்திற்கு வழிவகுத்தது எனலாம். சில பயனர்கள் மியாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், பலரும் மியாவின் நடத்தையுடன் உடன்படவில்லை. "அமெரிக்க சியோனிஸ்டுகள் தாங்கள் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள் என்று தொடர்ந்து அழுகிறார்கள். ஆனால் தெருக்களில் மக்களை வெளிப்படையாகத் துன்புறுத்துவதற்கும், அவர்களை எல்லாவிதமான அவதூறுகளுக்கும் அவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது" ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் போரில் பலரும் இரு பக்கத்தையும் ஆதரித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | ஆசிரியர் செய்யும் காரியமா இது! 15 வயது மாணவருடன் கட்டாய உடலுறவு - 3 பிள்ளைகளுக்கு தாய் வேறு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ