நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மகப்பேறு மருத்துவர் கைது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் புகழ்பெற்ற கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மகப்பேறு மருத்துவர் ஜார்ஜ் டிண்டால், மருத்துவ தேர்வின் போது 16 இளம்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக புகார் எழுந்தது. மேலும் அவரின் 30 ஆண்டுகால மருத்துவ தொழிலில் நூற்றுக்கணக்கான பெண் நோயாளிகளிடமும் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


இதையடுத்து, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் அவரை பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் குற்றவாளி என்று நிரூபணமானால், அவருக்கு 53 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க கூடும் என்று மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 72 வயதான மருத்துவர் ஜார்ஜ், 1990-களிலிருந்தே இதே போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். 
மேலும், அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆசிய மாணவர்கள் அவரால் அதிகமாக பாதிக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆங்கிலத்தில் புலமையில்லாதும், மகப்பேறு தொடர்பான தேர்வுகளில் அனுபவம் இல்லாததும் அவருக்கு சாதகமாக அமைந்தது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். 2016-ல் இருந்து இந்த புகார்களை விசாரித்த லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை அதிகாரிகள், அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய பின் அவரை கைது செய்துள்ளனர்.