World News In Tamil: 2011ஆம் ஆண்டில் ஒசாமா பின்லேடனைக் கொன்றதாக கூறிய முன்னாள் அமெரிக்க கடற்படை அதிகாரி, உடலில் காயம் ஏற்படுத்தியதாகக் கூறி இந்த வார தொடக்கத்தில் டெக்சாஸில் கைது செய்யப்பட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராபர்ட் ஓ'நீல் என்ற அந்த அதிகாரி, கடந்த புதன்கிழமை ஃப்ரிஸ்கோவில் பதிவு செய்யப்பட்டார் மற்றும் அதே நாளில் அவரிடம் 3,500 அமெரிக்க டாலர் பத்திரத்தை ஒப்படைத்ததை தொடர்ந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.  அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் பகுதியின் நாளிதழ் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.


அதன்படி, சிறைப் பதிவுகள் தாக்குதல் குற்றச்சாட்டை மட்டுமே பட்டியலிட்டிருந்தாலும், முன்னாள் கடற்படை சீல், உடல் காயத்தை ஏற்படுத்திய தாக்குதலுக்கான வகுப்பு A மற்றும் பொது போதையில் C வகுப்பு தவறான குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்டது. 2011ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அவரை கொன்றதாக ஓ'நீல் கவனத்தை ஈர்த்தார். ஓசாமா பில்டன், 9/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஆவார். 


அவர் தனது 2017 ஆம் ஆண்டு நினைவுக்குறிப்பு தொடரான "தி ஆபரேட்டர்"-இல் கதையை விவரித்தார். அமெரிக்க அரசாங்கம் இந்தக் கதையை ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை அல்லது மறுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | மத அடையாளங்களுக்கு NO! பிரான்ஸ் பள்ளிகளில் இஸ்லாமிய ஆடை அபாயா அணிவதற்கு தடை


ஓ'நீலின் சமீபத்திய கைது அவரது முதல் சர்ச்சையில் இருந்து நீண்ட நாள் கழித்து பதிவாகி உள்ளது. 2016ஆம் ஆண்டில், மொன்டானாவில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக அவர் கைது செய்யப்பட்டார், பின்னர் வழக்குரைஞர்கள் கைவிடப்பட்ட குற்றச்சாட்டுகளும் அவர் மீது உள்ளன. கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தின் மத்தியில் 2020ஆம் ஆண்டு முகக்கவசம் அணிய மறுத்ததற்காக டெல்டா ஏர்லைன்ஸால் அவர் தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


செப்டம்பர் 11 தாக்குதல்கள், பொதுவாக 9/11 என அழைக்கப்படும் நான்கு ஒருங்கிணைந்த இஸ்லாமிய தற்கொலைப்படை பயங்கரவாத தாக்குதல்கள் ஆகும்.  2001ஆம் ஆண்டு செப். 11ஆம் தேதி அமெரிக்காவிற்கு எதிராக அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதல் இதுவாகும். அன்று காலை, 19 பயங்கரவாதிகள் திட்டமிடப்பட்ட நான்கு வணிக விமானங்களை கடத்தினர். கிழக்கு கடற்கரையின் நியூ இங்கிலாந்து மற்றும் மத்திய அட்லாண்டிக் பகுதிகளில் இருந்து கலிபோர்னியாவிற்கு பயணிக்க இருந்த அந்த நான்கு விமானங்கள் அவர்களால் கடத்தப்பட்டது.


விமானக் கடத்தல்காரர்கள் முதல் இரண்டு விமானங்களை நியூயார்க் நகரத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்களில் மோதினர். அந்த நேரத்தில் உலகின் ஐந்து-உயரமான கட்டடங்களில் அது இரண்டாவது இடத்தில் இருந்தது. மேலும் அடுத்த இரண்டு விமானங்களை அமெரிக்க நாட்டின் வாஷிங்டன், டி.சி.க்கு அருகில் உள்ள இடங்களை நோக்கி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 19 பயங்கரவாதிகள் உள்பட 2996 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | சுத்தமான எரியாற்றலை கொடுக்கும் ‘செயற்கை சூரியனை’ உருவாக்கி வரும் சீனா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ