தென் கொரியாவின் ஹோட்டலில் பெண்கள் அறையில் உளவு கேமரா வைத்து அந்தரங்க படம் எடுத்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்கொரியாவில் 1600க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக படம் பிடித்து இணையதளத்தில் விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


தென்கொரியாவில் ஒரு கும்பல், அங்குள்ள பல்வேறு நகரங்களில் உள்ள விடுதிகளில் அறை எடுத்து தங்கும் பெண்களை ரகசிய கேமராக்காள் மூலம் ஆபாசமாக வீடியோ பிடித்து, இணையதளத்தில் பதிவேற்றி, பணம் சம்பாதித்துள்ளதாக தகவல் வெளியாகின. இதனையடுத்து போலீசார் 4 பேரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சுமார் 1600-க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.


இந்த மர்ம கும்பல் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வீடியோக்கனை பதிவு செய்ய தொடங்கியதாகவும், அவைகளை விற்றதன் மூலம் 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள், குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், சுமார் 18 லட்சம் ரூபய் அபராதமும் விதிக்கப்படும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.