Earthquake: இன்று காலை 11.51 மணிக்கு  Aegean கடலில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர், 120 பேர் காயமடைந்தனர். கிரீஸ் மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. கடலோர மாகாணமான இஸ்மிர்-இல்  (Izmir) கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இஸ்மிர் நகர மக்கள், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பீதியில் தெருக்களில் வந்து தஞ்சமடைந்ததாக நிலநடுக்கத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை முகமையை (AFAD) ஐ மேற்கோள் காட்டிய துருக்கிய அரசு ஊடகங்கள் நான்கு பேர் இறந்ததாகவும், 120 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கின்றன. இந்த செய்தியை, ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
இஸ்மீர் மாவட்டத்தி்ல் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளில் மக்கள் சிக்கியிருக்கலாம் என்றும், அந்த எண்ணிக்கை தெரிய வந்த பிறகு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.


நிலநடுக்கம் ஏற்பட்ட பல மாகாணங்களில் சொத்துக்களுக்கு ஓரளவு சேதம் ஏற்பட்டதாக பல்வேறு இடங்களில் இருந்து தகவல்கள் வந்ததாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


சமோஸ் தீவில் எட்டு பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இஸ்தான்புல் மற்றும் கிரேக்கத்தின் சில தீவுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இரு நாடுகளிலும் கடலில் பேரலைகள் காணப்பட்டன. இஸ்மிர் கடற்கரையின் சில பகுதிகளில் நீர், கரையை தாண்டி நகருக்குள் வந்தது. மாகாணத்தில் சுமார் 20 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தெரிவித்த இஸ்மீர் மேயர் டங்க் சோயர் (Tunc Soyer) இடிபாடுகளின் கீழ் இருந்து 70 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


பூகம்பத்தின் போது இஸ்மிரின் குசல்பாஸ் பிராந்தியத்தில் இருந்த மாணவர் இல்கே சைட் (Ilke Cide), அந்த காட்சிகளைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: ”பூகம்பத்திற்குப் பிறகு நீர்மட்டம் உயர்ந்தது. அதன்பின்பு தீவு பகுதிக்குள் சென்றுவிட்டோம். அந்த நிலைமையில் பூகம்பம் வந்த இடத்தைப் பார்க்கும் போது அச்சமாக இருந்ததாக அவர் கூறினார். 
"நான் பூகம்பங்களை அடிக்கடி பார்த்திருக்கிறேன். எனவே நான் இதை முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் இந்த நிலநடுக்கத்தைப் பார்க்கும்போது மிகவும் பயமாக இருந்தது" என்று அவர் கூறினார், பூகம்பம் குறைந்தது 25-30 வினாடிகள் நீடித்தது என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
துருக்கி, உலகிலேயே பூகம்பத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாகும். 1999 ஆகஸ்ட் மாதத்தில் இஸ்தான்புல்லின் தென்கிழக்கு நகரமான இஸ்மிட்-இல் (Izmit) 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 2011 ஆம் ஆண்டில், கிழக்கு நகரமான வேநில் (Van) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.


Read Also | இன்றைய தலைப்புச் செய்திகள் 2020 October 29


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR