நியூயார்க்: மக்களை 'உண்மையான சுயத்துடன்' இணைத்த வித்தியாசமான இரவு உணவு பார்ட்டி, பலரின் புருவங்களை உயர்த்தச் செய்திருக்கிறது. ஏனென்றால், இந்த டின்னர் பார்ட்டியில் கலந்துக் கொண்டவர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு இருந்தது. ஆடைக் கட்டுப்பாடு என்றால், ஆடையே போடாதீர்கள் என்ற கட்டுப்பாtடை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே இந்த இரவு விருந்தில் கலந்துக் கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் என்பது வித்தியாசமான விஷயமாக இருந்தால் கட்டுப்பாடு கடுமையானது தானே?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வில்லியம்ஸ்பர்க் சுவாசப் பயிற்சி & இரவு உணவு


நியூயார்க்கின் முக்கியாமான பகுதியான வில்லியம்ஸ்பர்க்கில், சுவாசப் பயிற்சிகள் மற்றும் சைவ இரவு உணவு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள கட்டணமும் உண்டு.நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மக்களை மூடி மறைக்கப்படாத சுயத்துடன் அந்த விருந்தில் கலந்துக் கொள்ள அழைப்பு விடுத்திருந்தனர்.


வழிகாட்டுதலின் கீழ் சுவாசப் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி நடத்தப்பட்ட பின், அனைவருக்கும் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பங்கேற்பாளர்கள் மூலிகை சாலட், பாஸ்மதி அரிசி மற்றும் சாக்லேட், ஸ்ட்ராபெர்ரிகள் அடங்கிய சைவ இரவு உணவை ரசித்து ருசித்தனர்.


மேலும் படிக்க | அமெரிக்காவில் தொடர்ந்து சரியும் வங்கிகள்! சிலிகானை தொடர்ந்து திவாலான பர்ஸ்ட் ரிபப்ளிக்!


விருந்துக்கு விண்ணப்பம்


அந்த விருந்துக்கு விண்ணப்பிக்க விரும்பியவர்கள், நிகழ்வின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் அனைத்து பங்கேற்பாளர்களின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்வதற்காக "ஸ்கிரீனிங் செயல்முறைக்கு செல்ல வேண்டும்.


வில்லியம்ஸ்பர்க்கில் உள்ள ரோசாவில், தி ஃபியூட் ப்ரீத்வொர்க் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்கள் ஆடை உடுத்திக் கொண்டு வரக்கூடாது என்பது நிபந்தனையாக இருந்தது.


இந்த விருந்தில் மொத்தம் நாற்பது பேர் கலந்து கொண்டனர், "மிகவும் தூய்மையான, உண்மையான சுயத்துடன் எங்களை இணைப்பதே எனது நோக்கம்" என்று தி ஃபியூட் எக்ஸ்பீரியன்ஸின் நிறுவனர் சார்லி ஆன் மேக்ஸ் கூறினார்.


சமையல், நிர்வாணம் மற்றும் தோழமை ஆகியவற்றில்  சார்லி ஆன் மேக்ஸ் கொண்டிருந்த விருப்பங்கள், 2020 ஆம் ஆண்டில் அவரது முதல் நிர்வாண குழு உணவை நடத்த தூண்டியது. அவர் இப்போது நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் நான்கு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளார், தி ஃபியூட் டின்னர் எக்ஸ்பீரியன்ஸ், தி ஃபியூட் ப்ரீத்வொர்க் எக்ஸ்பீரியன்ஸ், தி ஃபுட் க்லே எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் தி ஃபியூட்  என அந்த நான்கு நிகழ்வுகளுக்கும் அவர் பெயர் சூட்டியிருந்தார்.


இந்த பெயர் மேக்ஸின் ஜெர்மன்-யூத பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்துகிறது மற்றும் "உணவு" என்று உச்சரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் கலந்துக் கொள்வதற்கு, $44 முதல் $88 வரை செலவாகும். இது "நிச்சயமாக மதிப்புக்குரியது" என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க | AI சாட்ஜிபிடி தொடர்பான சர்வதேச விதிகளை உருவாக்க முயற்சிக்கும் ஜப்பான் உச்சிமாநாடு


"இந்த நிகழ்வுக்கு வந்த அனைவரும் தொடக்கத்தில் கொஞ்சம் பயந்தவர்களாகவும், அமைதியாகவும் இருக்கிறார்கள். ஆனால், சற்று நேரத்தில் சரியாகிவிடுகிறது.. நிர்வாணமாக ஆனால், உடல்களுக்கு மதிப்புக் கொடுத்தாலும், அவை தொட்டுக் கொள்ளாத இடத்தில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று நிகழ்வில் கலந்துக் கொண்ட ஒருவர் கூறுகிறார்.


சுவாசப் பயிற்சிகளுக்குப் பிறகு, விருந்தினர்களுக்கு, மூலிகை சாலட், பாஸ்மதி அரிசி மற்றும் சாக்லேட்-ஸ்ட்ராபெர்ரிகள் என சைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


"பல நேரங்களில் மக்கள் பதட்டமாக இருக்கிறார்கள்," மேக்ஸ் கூறினார். "மக்கள் ஒரு குழுவில் நிர்வாணத்தை அனுபவிப்பதற்காக முதல் முறையாக வருகிறார்கள், எனவே மக்கள் மிகவும் வசதியாக உணர உதவுவதற்கு வெவ்வேறு வசதிகளை வழங்குவது முக்கியம்" என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.


இந்த நிகழ்வில் ரிது சாஹேப் என்பவர் பங்கேற்க முடிவு செய்ததற்கான காரணம் என்ன தெரியுமா?  மாதவிடாய் காலத்தில் தனது உடலில் நம்பிக்கையை மீட்டெடுக்க விரும்பினார். "வெளிப்படையாக, அதன் தேவை இருக்கிறது, அதனால்தான் இங்கு பல பெண்கள் வந்திருந்தனர்," என்று ரிது சாஹேப் கூறினார்.


பொதுவாக, பொதுவெளியில் நாம் செல்லும்போது, உடை அணியும் விதம், உங்கள் தோற்றம் போன்றவற்றில் நிறைய அழுத்தம் இருக்கிறது. ஆனால் இந்த அறையில் எந்த அழுத்தமும் இல்லை. எனவே, இது மிகவும் நேர்மறையான அனுபவம் என்று நான் நினைக்கிறேன். மேலும் இந்த இயக்கத்தை மேலும் வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று அவர் சொல்கிறார். 


மேலும் படிக்க | விளையாட்டு வினையானது... மாத்திரைகளால் பறி போன 13 வயது சிறுவனின் உயிர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ