1948-ல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இதுவரை சந்திக்காத மோசமான பொருளாதார நெருக்கடியை  இலங்கை எதிர்கொண்டுள்ளது. இதனால் எரிபொருள், உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையின் பெட்ரோல் விநியோகத்தில் மூன்றில் 2 பங்கு விநியோகத்தை அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷனும், ஒரு பங்கு விநியோகத்தை லங்கா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனும் மேற்கொண்டு வருகிறது. சிலோன் பெட்ரோலியம் காா்ப்பரேஷனின் விற்பனை நிலையங்களில் தட்டுப்பாடு நிலவுவதால், இருசக்கர வாகனங்கள் ஒருமுறைக்கு ரூ.1,000 வரையே எரிபொருள் நிரப்ப முடியும் எனவும், மூன்று சக்கர வாகனங்கள் ரூ.1,500 வரையும், காா், ஜீப், வேன் ஆகியவற்றுக்கு ரூ.5,000 வரையும் எரிபொருள் நிரப்பிக் கொள்ளலாம் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | இலங்கை நெருக்கடி: ஒரு கிலோ மஞ்சள் ரூ.3,853; ஒரு கிலோ பிரெட் விலை ரூ.3,583


நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் 3 பில்லியன் டாலர் (ரூ.30 ஆயிரம் கோடி) உதவி கேட்டு இலங்கை நிதியமைச்சர் அலி சாப்ரி வாஷிங்டன் சென்றுள்ளார். நாளை இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் லங்கா ஐஓசி நிறுவனம் பெட்ரோல், டீசல் விலையை ஒரே நாளில் 35% வரை உயர்த்தியுள்ளது. டீசல் விலையை ரூ.75 உயர்ந்து ரூ.327 ஆகவும், பெட்ரோல் ரூ.35 உயர்ந்து ரூ.367 ஆகவும் விற்பனையாகிறது. 


இலங்கை நாணயத்தின் மதிப்பு கடந்த ஒரு மாதத்தில் 60 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சி அடைந்துள்ளதால் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல் விலை 90% அதிகரித்துள்ளது. பொதுப் போக்குவரத்திற்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் டீசல் விலை 138% உயர்ந்துள்ளது. 


மேலும் படிக்க | Srilanka Crisis: IMF உடன் பேச்சுவார்த்தை நடந்த இலங்கை நிதி அமைச்சர் அமெரிக்கா பயணம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR