‘இந்திய குடிமகன்’ மெகுல் சோக்ஸியின் உரிமைகள் மதிக்கப்படும்: டொமினிகா பிரதமர்
நாட்டை உலுக்கிய ₹13,500 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில், தப்பியோடிய வைர வியாபாரி மெகுல் சோக்ஸி, ஆன்டிகுவா தீவில் வாழ்ந்து வருகிறார்.
புதுடெல்லி: நாட்டை உலுக்கிய ₹13,500 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில், தப்பியோடிய வைர வியாபாரி மெகுல் சோக்ஸி, ஆன்டிகுவா தீவில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த மே 23 மாலை ஆன்டிகுவாவில் உள்ள வீட்டிலிருந்து திடீரென மர்மமான முறையில் காணாமல் போனார். பின்னர் மே 26 அன்று டொமினிகாவில் சிக்கினார்.
டொமினிகா உயர் நீதிமன்றத்தில் தான் “சட்டத்தை மதிக்கும் குடிமகன்” என்று கூறிய மெகுல் சோக்ஸி (Mehul Choksi) தனது வாக்குமூலத்தில், அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகத் தான் இந்தியாவிலிருந்து சென்றதாக கூறினார்.
முன்னதாக நீதிமன்றத்தில், தான் டொமினிகாவிற்கு கடத்தப்பட்டதாக கூறிய மெகுல் சோக்ஸி, சில பெயர்களையும் குறிபிட்டு, அவர்கள் தான் கடத்தி சென்றனர் என்றும், டொமினிகா உயர்நீதிமன்றத்தில், இந்திய அதிகாரிகள், அவர்களையும் விசாரணை செய்யலாம் என்று கூறினார்.
இதற்கிடையில், டொமினிகா (Dominica) பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் (Rooseveltt Skerrit ), "இந்திய குடிமகன்" மெஹுல் சோக்ஸியின் உரிமைகள் மதிக்கப்படும் என்றும், எதிர்கால நடவடிக்கை குறித்து நீதிமன்றங்கள் முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளார்.
ALSO READ | PNB வங்கி மோசடி: ஆன்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்ஸியை காணவில்லை
"இந்த இந்திய குடிமகனான மெகுல் சோக்ஸியின் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. அவர் விஷயத்தில் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்கும். இந்த விவகாரத்தில் எதையும் கூற நான் விரும்பவில்லை" என்று டொமினிகா பிரதமர் ஸ்கெரிட் கூறினார்.
2018ஆம் ஆண்டு ஜனவரியில், இந்தியாவில் இருந்து தப்பியோடிய வைர வியாபாரரியான மெகுல் சோக்ஸி (Mehul Choksi), ஆன்டிகுவா மற்றும் பார்புடா குடியுரிமையை பெற்றார். பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில், விசாரணைக்காக இந்தியாவிடம் நாடு திருப்பி அனுப்பப்படுவதை தடுக்க ஒரு சட்டப் போரில் ஈடுபட்டுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியின் தப்பியோடிய மற்றொரு வைர வியாபாரியான நிரவ் மோடி, இவருடைய நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கதுALSO READ | மெகுல் சோக்ஸி சிறையில் இருக்கும் படங்கள் வெளியானது; அவரது ‘காயங்கள்’ கூறுவது என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR