லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகன் மரண தண்டனையிலிருந்து விடுதலை
கடந்த 2011-ம் ஆண்டு லிபியா அதிபராக இருந்த மும்மர் கடாபி மக்கள் புரட்சியின் மூலம் பதவி இழந்தார். அவர் ஷின்டான் நகரில் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.
அவரது மூத்த மகன் அபு பகர்அல்- சித்திக், இளைய மகன் சயீப் அல்-இஸ்லாம் கடாபி. இந்நிலையில் சயீப் அல் இஸ்லாம் கடந்த 2011-ம் ஆண்டு நைஜருக்கு தப்பி சென்ற போது பாலை வனத்தில் கைது செய்யப்பட்டார்.
4 ஆண்டு விசாரணைக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும்படி உத்தரவிடப்பட்டது.
அவருக்கு பொது மன்னிப்பு வழங்கும்படி குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து இருந்தனர். அதை ஏற்று அவரை லிபியா அரசு விடுதலை செய்தது.
மரண தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சயீப் அல்- இஸ்லாம் லண்டன் பொருளாதார கல்லூரியில் பி.எச்.டி. பட்டம் படித்தவர் ஆவார்.