கலிபோர்னியா: விண்வெளியில் விண்கல் ஒன்றை திசை மாற்றுவதற்கான நாசாவின் முயற்சி வெற்றிபெற்றது. முயற்சி வெற்றி பெற்றாலும், அது எதிர்பார்த்த பலனைக் கொடுத்ததா? இதை இப்போது உறுதியாக சொல்ல முடியாது. 690 கிலோ எடை கொண்ட டார்ட் விண்கலம், 22,500 வேகத்தில் பயணித்தது. விண்கல்லை திசை மாற்றும் முயற்சி டார்ட் ஸ்பேஸ் கிராப்ட் அனுப்பப்பட்டதற்கான காரணங்களும் அதன் விளைவுகளும் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்த ஸ்பேஸ் கிராப்ட், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் மூலம் இது விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. விண்ணுக்கு அனுப்ப்பட்ட டார்ட் ஸ்பேஸ் கிராப்ட், தனது இலக்கான விண்கல்லில், திட்டமிட்டபடி மோதியது. இதன் மூலம் அந்த விண்கல் திசை மாறியதா என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.   


பூமியில் விண்கற்கள் மோதுவதால், பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன, பல உயிரினங்களே அழிந்துப் போயுள்ளது. 66 மில்லியன் வருடங்களுக்கு முன் ஒரு விண்கல் மோதியதில்தான் டைனோசர்கள் என்ற ஒரு இனமே அழிந்தது. டைனோசர்களை கூண்டோடு, வேரோடு அழித்த விண்கல் பூமி மீது விழுந்தபோது, பூமியில் பெரிய அளவிலான சுனாமிகள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | சனி கிரகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சனியின் வளையங்கள்


அறிவியல் ஆய்வுகளால், தற்போது பூமியின் மீது மோதவிருக்கும் விண்கற்களை அடையாளப்படுத்துவதும், அவற்றை தடுத்து நிறுத்தும் முயற்களும் சாத்தியமாகியுள்ளது.  


பூமிக்கு அருகில் உள்ள வேறு ஒரு விண்கல்லை மோதி நாசா தற்போது சோதனை செய்து உள்ளது. இந்த சோதனையில் முதல் கட்ட வெற்றியும் பெற்றுவிட்டது.  பூமியில் இருந்து 6.3 மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கும் டிமோர்போஸ் என்ற விண்கல்லை நோக்கித்தான் இந்த ஸ்பேஸ் கிராப்ட் அனுப்பப்பட்டது. இது பூமிக்கு மிக அருகில் இருக்கும் கொஞ்சம் ஆபத்தான விண்கல். ஆனால் பூமியை மோதும் வாய்ப்பு இல்லை. 


இந்த விண்கல்லானது, தனக்கு அருகில் இருக்கும் டிடிமோஸ் என்ற மற்றொரு விண்கல்லை சுற்றி வருகிறது. கடந்த நவம்பர் மாதம், டார்ட் ஸ்பேஸ்கிராப்ட் ஸ்பேஸ் மூலம் கலிபோர்னியாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு துல்லியமாக டார்ட் விண்கலம் மோதியது. இந்த விண்கல்லுக்கு அருகே செல்வதை டார்ட் புகைப்படமாக வெளியிட்டது.


மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உருவாக்கிக் காட்டிய MOXIE! செவ்வாயில் மனிதர்கள்?


டார்ட் ஸ்பேஸ் கிராப்ட் Dimorphos விண்கல்லின் மையத்தில் துல்லியமாக மோதியது. இதன் மூலம் அந்த விண்கல் தனது திசையை மாற்றுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். அடுத்த சில வாரங்கள் Dimorphos மற்றும் அது சுற்றும் Didymos என இரண்டையும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்வார்கள்.


Didymosயை முன்பை விட குறைந்த நேரத்தில் Dimorphos சுற்றி வந்தால், அது சரியாக திசை மாற்றப்பட்டு உள்ளது என்று பொருள் கொள்ளலாம். அதாவது இரண்டரை நிமிடங்களில் இருந்து 10 நிமிடம் வரை இதன் சுற்றுக்காலம் அளவு குறைந்து இருந்தால் Dimorphos சரியாக திசை மாற்றப்பட்டுள்ளது என்பதை உணர்ந்துக் கொள்ளலாம்.


மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் சூரிய ஒளிவட்ட புகைப்படம்! நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவரின் சாதனை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ