இன்று காலை 8 மணி முதல் தைவானில் அதிபர் தேர்தல்; முடிவு இன்றே அறிவிக்கப்படும்
அடுத்த அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக இன்று காலை 8 மணி முதல் தைவானில் வாக்களிப்பு தொடங்கியது.
புது டெல்லி: அடுத்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தைவானில் உள்ள வாக்காளர்கள் வாக்குப்பதிவு நிலையங்களுக்கு வெளியே வரிசையில் நிற்கிறார்கள். இன்றைய தேர்தலில் வாக்களிக்க சுமார் 19 மில்லியன் மக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 20 வயது நிரம்பிய குடிமக்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள். இந்த தேர்தலில் வெற்றி பெரும் கட்சி மே மாதத்தில் ஆட்சி அமைக்கும். புதிய அதிபர் பதவி ஏற்பவர் 4 ஆண்டுகள் நாட்டுக்காக சேவையாற்றுவார்.
வாக்குச்சாவடிகள் காலை 8 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 4 மணிக்கு மூடப்படும். வாக்கெடுப்பு முடிவடைந்த நான்கு மணி நேரத்திற்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஆளும் ஜனநாயக முன்னேற்றக் கட்சியை சேர்ந்த அதிபர் சாய் இங்-வென் (Tsai Ing-wen) இரண்டாவது முறையாக பதவியேற்க போட்டியிட்டுள்ளார். அவர் தனது பிரச்சாரத்தின்போது, தன்னை ஜனநாயகத்தின் ஒரு சாம்பியனாக சித்தரித்திருந்தார். மேலும் பெய்ஜிங்குடன் நெருக்கமான உறவுகளை அவர் விரும்பவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சாயின் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்தது. ஆனால் இப்போது அவர் தேர்தலில் முன்னணியில் உள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் அவரது முக்கிய போட்டியாளரான ஹான் குவோ-யூ (Han Kuo-yu) சீனாவுடனான பதட்டங்களைத் தணிக்க பெய்ஜிங்குடனான உறவுகளை மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.