வீடு வாங்கலையோ வீடு: தர்பூசணிக்கு பதிலாக வீட்டை விற்பனை செய்யும் சீன ரியல் எஸ்டேட்
House vs Watermelon: பொருளாதார சிக்கல்களால் ரியல் எஸ்டேட் சரிந்திருக்கும் சீனாவில், தர்பூசணிக்கு பதிலாக வீடு விற்கப்படுகிறது
பொருளாதார சிக்கல்களால் சீனா மீண்டும் பண்டமாற்று முறைக்கு மாறுகிறதா என்ற கேள்விகள் எழுகின்றன. தற்போது சீனாவில், சொத்து சந்தையில் ஏற்பட்டிருக்கும் அதல பாதாள சரிவு மக்களுக்கு வீடு வாங்கும் ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால் ரியல் எஸ்டேட் முதலாளிகளின் நிலை தான் திண்டாட்டமாகிவிட்டது. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாத நிலையில், வேறு வழியில்லாமல், தர்பூசணிகள், பீச் மற்றும் பிற விவசாய பொருட்களின் வடிவில் வீடுகளுக்கு பணம் வாங்கப்படுவதாக சீன அரசு ஊடகத்தை மேற்கோள் காட்டி AFP செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
வீடு வாங்குபவர்களை கவரும் முயற்சியில் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் அவ்வாறு செய்கிறார்கள் என்று AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் வீடு விற்பனை தொடர்ந்து 11 மாதங்களாக கிடுகிடுவென சரிந்த நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மே மாதத்தில் 31.5 சதவீதம் சொத்து விற்பனை குறைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | சூடானில் ஆட்சி கவிழ்ப்பை எதிர்த்த போராட்டக்காரர்களில் 9 பேர் பலி
ஒரு கட்டுமானம் திட்டம் தொடங்கும் முன் பில்டர்கள் டெபாசிட் வாங்க அரசு தடை விதித்ததால், சீனாவில் உள்ள வீட்டுச் சந்தை, பொருளாதாரம் மந்தம் மற்றும் கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கிழக்கு நகரமான நான்ஜிங்கில் உள்ள ஒரு டெவலப்பர் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து 100,000 யுவான் வரை மதிப்புள்ள தர்பூசணிகளை பெற்றுக்கொள்வதாக அரசு நடத்தும் சைனா நியூஸ் வீக்லி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | UFO: பூமியில் மட்டுமே உயிரினங்கள் இருக்கிறதா? பறக்கும் தட்டு எழுப்பும் கேள்விகள்
ஹோம்பில்டர் சென்ட்ரல் சைனா மேனேஜ்மென்ட் சமூக ஊடகங்களில் மே மாத இறுதியில் கூறியது: "புதிய பூண்டு பருவத்தின் போது, குய் கவுண்டியில் உள்ள பூண்டு விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் நிறுவனம் உறுதியான முடிவை எடுத்துள்ளது. நாங்கள் விவசாயிகள் வீடு வாங்க உதவத் தயாராக இருக்கிறோம்."
AFP வெளியிட்டுள்ள செய்தியில், சீனாவின் சிறிய நகரமான வுக்ஸியில், மற்றொரு டெவலப்பர் பீச் பழங்களாக வீட்டுக்கான தொகையை பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள முக்கிய பூண்டு உற்பத்தி செய்யும் பகுதியான Qi கவுண்டியில் உள்ள வீடு வாங்குபவர்கள், தங்கள் தயாரிப்புகளை சந்தை விலையை விட மூன்று மடங்குக்கு மாற்றிக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | உக்ரைனின் மிக முக்கிய லிசிசான்ஸ்க் நகரத்தை ரஷ்யா கைப்பற்றியுள்ளதா
கடந்த வாரம் வெளியிடப்பட்ட, சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டின் அறிக்கையில், மத்திய சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள யுன்செங்கில் உள்ள விவசாயிகள் இந்த ஆண்டு ஜூன் மாத அறுவடை காலத்தில் ஆயிரக்கணக்கான பழுத்த தர்பூசணிகளை அறுவடை செய்ததாக தெரிவித்துள்ளது.
சில விவசாயிகள் பழங்களின் தரத்தை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு வயலில், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தர்பூசணிகளை பயிரிடுவார்கள்..
சில பழ விற்பனையாளர்கள் ஷாங்க்சியில் இருந்து பெய்ஜிங்கிற்கு 800 கிலோமீட்டர் தொலைவுக்கு பயணித்து தங்கள் பொருட்களை விற்பதற்கு பயணம் செய்கிறார்கள்.
மாகாணத்தின் Xiaxian கவுண்டி, நாட்டின் மிகப்பெரிய தர்பூசணி உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஒன்றாகும்.
மேலும் படிக்க | அணு ஆயுத போர்; 30 நிமிடங்களில் 100 மில்லியன் பேர் கொல்லப்படுவார்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR