தற்போதைய உலகத்தில் ஒருவரின் வாழ்க்கையில் கூகுள் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. எந்தத் தகவல் வேண்டுமென்றாலும் மனிதனின் மனமும், சிந்தனையும் செல்லும் இடம் கூகுள். அந்த அளவுக்கு மனிதர்களோடு ஒன்றிப்போய்விட்டது கூகுள். அதேற்கேற்றார்போல் உலகம் தோன்றியது எப்போது என்பதில் தொடங்கி இன்னொரு உலகம் இருக்கிறதா என்பதுவரைகூட கூகுளில் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. இதனால் கூகுள் இல்லாமல் மனிதனின் ஒரு நிமிடம்கூட கழியாது என்ற நிலை உருவாகியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சூரியனின் மேற்பரப்பா இது? வியக்க வைக்கும் புகைப்படங்களை எடுத்த சோலார் டெலஸ்கோப்


கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் பிச்சை தற்போது இருக்கிறார். அந்த நிறுவனமானது அவ்வப்போது பல்வேறு வகையான செயலிகளையும், புதுப்புது அம்சங்களையும் அறிமுகம் செய்துவருகிறது. 



இந்நிலையில் உலகம் முழுவதும் ஒரு தகவல் அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. அதாவது கூகுள் நிறுவனம் 3,500 ஆடுகளுக்கு வேலை வழங்கியுள்ளது.


 



கூகுளின் தலைமை அலுவலகமானது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இருக்கும் மௌண்டெய்ன் வ்யூவில் அமைந்திருக்கிறது. அந்த அலுவலக தோட்டத்தில் உள்ள புல்தரைகளை சீராக வைத்துக்கொள்ள சுமார் 3,500 ஆடுகளை வாடகைக்கு வாங்கியுள்ளது. 


 



பெட்ரோல், டீசலில் இயங்கும் இயந்திரங்களை பயன்படுத்தி தோட்டப் பணிகளைச் செய்வதற்குப் பதிலாக சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை குறைக்கும் விதமாக ஆடுகளை கூகுள் நிறுவனம் பயன்படுத்துகின்றது. இதேபோல் கடந்த 2009ஆம் ஆண்டும் 200 ஆடுகளை கூகுள் நிறுவனம் வாடகைக்கு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ