புதுடெல்லி: பெருமளவில் சொத்துக்களை இழந்தவர்கள் பட்டியலில் இணைந்த எலோன் மஸ்க் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளார். வரலாற்றிலலேயே மிகப்பெரிய சொத்து இழப்பை எதிர்கொண்ட முதல் நபர் என்ற பதிவை ஏற்படுத்திய எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக கின்னஸ் உலக சாதனையில் சேர்த்துள்ளார். நவம்பர் 2021ல் இருந்து தோராயமாக $182 பில்லியன் (£153B; €173B) மதிப்பிலான சொத்தை மஸ்க் இழந்துள்ளார், இருப்பினும் அவரது இழப்பின் அளவு, சுமார் $200 பில்லியனுக்கு அருகில் இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெக் பில்லியனர் எலோன் மஸ்க், தனக்கு சொந்தமான மின்சார கார் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் மதிப்பில் 11% என்ற அளவில் பங்கு மதிப்பு சரிவைக் கண்டார். ஒரு ஆண்டீல் மட்டும் பதினோரு சதவிகித மதிப்பு வீழ்ச்சி என்பது அவருக்கு கிடைத்த மிகப் பெரும் பொருளாதார வீழ்ச்சியாகும்.


எலோன் மஸ்கின் சொத்து மதிப்பு


2021ம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் எலோன் மஸ்கின் சொத்து மதிப்பு 340 பில்லியனாக இருந்தது, அதன் பின்னர், அவரது சொத்து மதிப்புக்கு இறங்குமுகம் தான் என்பது அவரது மாபெரும் சொத்து இழப்புக்கு காரணமானது.  


அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்குப் பிறகு வரலாற்றில் 200 பில்லியன் டாலர்களைக் கடந்த இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டில் மஸ்க் இந்த மைல்கல்லை அடைந்தார், இந்த சொத்து மதிப்பு உயர்வு என்பது, டெஸ்லா பங்குகளின் மதிப்பில் வியத்தகு ஏற்றம் காரணமாக ஏற்பட்டது.


மேலும் படிக்க | துபாயில் களைகட்டும் பொங்கல் திருவிழா: ‘துபாய் புள்ளிங்கோ’ நடத்திய அமர்க்கள கொண்டாட்டம்


இப்போது, LVMH இன் உரிமையாளரான பெர்னார்ட் அர்னால்ட், இந்த மாத தொடக்கத்தில் எலோன் மஸ்க்கை முந்தி, உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஆவார்.


டெஸ்லா பங்குகளின் மதிப்பு வீழ்ச்சியடைய என்ன காரணம்?
பிரபல மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரை எலோன் மஸ்க் இந்த ஆண்டு வாங்கினார்.  $44 பில்லியன் செலவில் எலோன் மஸ்க் செய்த இந்த மிகபெரிய முதலீடு தொடர்பான சர்ச்சைகளும் சிக்கல்களும், 2021ஆம்  ஆண்டு முழுவதும் நீடித்தது. இறுதியாக, சட்டரீதியான அழுத்தத்தை எதிர்கொண்ட எலோன் மஸ்க், அக்டோபர் இறுதிக்குள் ஒப்பந்தத்தை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


பங்கு மதிப்பு சரியக் காரணம்


ட்விட்டர் கையகப்படுத்துதலால் ஏற்பட்ட சர்ச்சைகளும், சட்ட சிக்கல்களும், எலோன் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் செயல்பாடுகளில் இருந்து திசைதிரும்புவார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியதால், டெஸ்லா பங்குதாரர்கள் மஸ்க் மீது நம்பிக்கை இழந்தனர்.


மேலும் படிக்க | உடல் எடை கன்னாபின்னானு ஏறுதா? இதுல கவனம் செலுத்தினா போதும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ