Hair Dye Effect: முடி கருப்பானது; ஆனால் முகம் கார்டூனானது..!!
ஹேர் கலர் பயன்படுத்தினால், முடி பளபளப்பாக மாறும் என்று நம்பப்படுகிறது. இது தவிர, இது உங்கள் வெள்ளை முடியை கருமையாக்கி புதிய தோற்றத்தை அளிக்கிறது.
Hair Dye Side Effect: தங்கள் நரைத்த தலைமுடியை கருமையாக்கவும், அதன் மூலம் இளமையான தோற்றத்தை கொண்டு வரவும், ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். ஹேர் கலர் பயன்படுத்தினால், முடி பளபளப்பாக மாறும் என்று நம்பப்படுகிறது. இது தவிர, இது உங்கள் வெள்ளை முடியை கருமையாக்கி புதிய தோற்றத்தை அளிக்கிறது. ஹேர் டை தலைமுடிக்கு ஊட்டமளிப்பதோடு மட்டுமல்லாமல், தலை முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால் ஹேர் டை போட்ட பிறகு நேர்ந்த அவல நிலையை அறிந்தால் தவறுதலாக கூடஹேர் டை உபயோகிக்க மாட்டீர்கள்.
ஹேர் டையால் பாழான முகம்
வெஸ்ட் மிட்லாந்தில் உள்ள ஷெல்டனில் வசிக்கும் அனிதா பெண்டன், அவர் ஹேர் டை பயன்படுத்திய நிலையில், அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாதில், இனி ஹேர் டை பயன்படுத்த மாட்டேன் என்று சபதம் செய்தே விட்டார்.
41 வயதான அனிதா, ஹேர் டை பயன்படுத்தியதால் ஏற்பட்ட அலர்ஜியினால், கண்கள் வீங்கியதாகவும், நான்கு நாட்களாக தற்காலிகமாக பார்வையிழந்ததாகவும் கூறினார். 2019 ஆம் ஆண்டு முதல், 6 முதல் 8 வாரங்களுக்கு ஒருமுறை இந்த ஹேர் டையைப் பயன்படுத்துவதாக கூறும் அனிதா இதற்கு முன்பு அவர் அத்தகைய அல்ர்ஜி பிரச்சனையை அனுபவித்ததில்லை எனக் கூறுகிறார்
ALSO READ | Health Alert! அளவுக்கு மிஞ்சிய சீரகம் பெரும் கேடு விளைவிக்கும்..!!
உச்சந்தலையில் எரிச்சல்
அக்டோபர் 16 ஆம் தேதி, தனது தலைமுடிக்கு ஹேர் டையை தடவியவுடன், 10 நிமிடங்களுக்குப் பிறகு அவரது உச்சந்தலையில் எரிச்சல் உணர்வு என்று அனிதா கூறினார். மறுநாள் அவரது தலைமுடி முற்றிலும் தலையில் ஒட்டிக்கொண்டதாகவும், அடுத்த இரண்டு நாட்களில், அவரது வாய் முழுவதும் வீங்கியதாகவும் அவர் கூறுகிறார். அவரது கண் இமைகள் முற்றிலுமாக மூடப்பட்டு, அவரால் பார்க்க முடியாமல் போய்விட்டது. இதனால் ஒருவாரம் வேலைக்கு விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
தனது அப்பாவினால் கூட அடையாளம் காண முடியாத அளவுக்கு தனது தோற்றம் மாறிவிட்டது என்று அனிதா கூறினார். ஹேர் டை தனது வாழ்க்கையை இவ்வளவு மோசமாக பாதிக்குமா என எதிர் பார்க்காத அவர் இந்த அதிர்ச்சியினால், தான் இனி ஹேட் டை பக்கம் தலை வைத்து கூட படுக்க போவதில்லை என முடிவெடுத்துள்ளார்.
ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR