டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காணாமல் போன இந்தியச் சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டதாக கருதப்படுகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெக்ஸாஸ் மாகாணத்தின் ரிச்சர்ட்சன் சிட்டியை சேர்ந்தவர் வெஸ்லி மாத்யூஸ். இவர் இந்தியாவில் இருந்து 3 வயது சிறுமி ஒருவரை தத்தெடுத்துச் சென்றார். அச்சிறுமிக்கு ஷெரின் மாத்யூஸ் என பெயரிட்டு வளர்க்கப்பட்டு வந்தார். 


இதனையடுத்து இச்சிறுமி, கடந்த 7-ஆம் தேதி காணமால் போனதாக புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் வெஸ்லி மாத்யூஸ் கூறியதாவது, சம்பவத்தன்று சிறுமி பால் அருந்தாததால் அவரை வீட்டிற்கு வெளியே நிற்க வைத்துள்ளார். 15 நிமிட இடைவெளிக்கு பிறகு வெஸ்லி மாத்யூஸ் வெளியே வந்து பார்த்த போது சிறுமி காணாமல் போனதாக தெரிவித்தார்.


இந்நிலையில் அவரது வீட்டிற்கு அருகாமையில், டெக்சாஸ் காவல்துறையினரால் சிறுமி ஒருவரின் உடல் சடமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த உடல் அச்சிறுமியின் உடலாக இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகின்றது!


இறந்த சிறுமியின் உடல் ஷெரின் தான என்பது குறித்து விசாரணை நடைப்பெற்று வருவதாக தகவல்கள் தெரவிக்கின்றன.