அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் உள்ள மதுபான விடுதியில், ஸ்ரீனிவாஸ் குச்சிபொட்லா என்ற இந்தியர் அமெரிக்கரான ஆதம் புரின்டன் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஹிலாரி கிளின்டன், ஸ்ரீனிவாஸ் குச்சிபொட்லா மரணம் குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.


ஹிலாரி கிளின்டன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-


நாட்டில் அச்சுறுத்தல்களும் வெறுப்பினவாதக் குற்றங்களும் உயர்ந்துகொண்டே செல்கின்றன.


இதற்கு நாட்டின் அதிபர்தான் காரணம் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. குற்றங்களை ஒடுக்க வேண்டிய நடவடிக்கைகளை டிரம்ப் முடுக்கிவிடவதோடு, இது குறித்து பதில் சொல்லியாக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.