தாய்லாந்து குகையினுள் 2 வாரங்களாக சிக்கி தவிக்கும் 12 சிறுவர்கள் தங்களின் பெற்றோருக்கு தாங்கள் நலமாக இருப்பதாக கடிதம்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாய்லாந்தின் மே ஸை பகுதியில் உள்ள குகையினுள் 16 வயதிற்குட்பட்ட 12 கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் 25 வயதாகும் பயிற்சியாளர் உட்பட 13 பேர் சிக்கிக் கொண்டனர். குகையில் சிக்கி 9 நாட்களுக்கு பிறகு மீட்பு படையினர் அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்தனர். 


இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக குகையினுள் தேங்கும் மழைநீரின் அளவு அதிகரித்துக்கொண்டே வந்தது. குறுகிய, கரடுமுரடாண பாதையை கொண்ட குகை என்பதால் மீட்பு படையினர் பெரும் சவாலை சந்தித்து தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.


இந்நிலையில், கனமழை காரணமாகமீட்பு பணிகள் முடங்கியது. மழை தொடர்ந்தால் குகையினுள் நீர் தேக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால், நீரை வெளியேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் குகையின் பின்புறம் வழியாக பாதை அமைக்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உணவு இல்லாமல் சோர்வடைந்த நிலையில் இருந்த அவர்களுக்கு தொடர்ந்து உணவு, மருந்துகள் முதலியவை வழங்கப்பட்டு வருகின்றன. 


இந்நிலையில், தாமாக முன்வந்து சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட கடற்படை முன்னாள் அதிகாரி ஒருவர் உள்ளே ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ராணுவம் மற்றும் கடற்படை சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சிறுவர்களை மீட்கும் பணியை நிறுத்திய பாதுகாப்பு படையனர். 



இதையடுத்து, தன்களின் பெற்றோருக்கு அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளது; பெற்றோர்கள் கவலை படவேண்டாம். நாங்கள் நலமாக இருக்கிறோம் என்றும், எங்களுக்கு தொடர்ந்து நானா தைரியம் கொடுத்ததற்கு நன்றி என்றும் இப்படை ஒரு சம்பவம் நடந்ததற்கு மனம் வருந்துவதாகவும் சிறுவன் ஒருவன் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.